இந்த Samsung போன் மீது பொசுக்குன்னு 33% விலை குறைப்பு! Amazon-ல் அள்ளும் ஆர்டர்.. என்ன மாடல்? நம்பி வாங்கலாமா?
ஆப்பிள் ஐபோன்களுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸ் என்றால் அது சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஆகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் அறிமுகமான பின்னர் சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்கள் வெளியாகும்.
அப்படியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் வருகிற 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இது வருகிற ஜனவரி 17 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸின் ஹை-எண்ட் மாடலான கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் மீது 33% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், க்ரீம் கலர் ஆப்ஷன் ஆனது 33% தள்ளுபடியை பெற்று ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.99,899 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல க்ரீன் கலர் ஆப்ஷன் ரூ.1,00,220 க்கும், பிளாக் கலர் ஆப்ஷன் ரூ.99,999 க்கும் அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நிச்சயம் இதுவொரு நல்ல ஆஃபர் ஆகும். இதை பயன்படுத்தி கொள்ளலாமா? இப்போதே சாம்சங் எஸ்23 அல்ட்ராவை வாங்கி விடலாமா அல்லது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் அறிமுகத்திற்காக காத்திருக்கலாமா? என்கிற குழப்பம் உங்களுக்குள் எழுந்தால்.. இதோ அதற்கான எங்களுடைய விளக்கம்!
சந்தேகத்திற்கு இடமின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவானது - இந்திய சந்தையில் மட்டுமல்ல - உலகளவில் வாங்க கிடைக்கும் டாப் 3 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்குவதற்கு 4 காரணங்களை எங்களால் முன்வைக்க முடியும். அதே சமயம் இதை வாங்காமல் தவிர்ப்பதற்கான 1 நியாயமான காரணமும் எங்களிடம் உள்ளது.

நம்பி வாங்க காரணம் 01 - இதன் கேமரா செட்டப்: அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 9 மாதங்களுக்குப் பிறகும், எஸ்23 அல்ட்ராவானது, சந்தையில் கிடைக்கும் பெஸ்ட் கேமரா போனாக திகழ்கிறது. பல்வேறு ஒளி நிலைகளில் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறனை கொண்டுள்ளது.
இதன் கேமரா செட்டப்பில், 200 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் + 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
நம்பி வாங்க காரணம் 02 - இதன் டிஸ்பிளே: எஸ்23 அல்ட்ராவானது கண்களை ஈர்க்கும் 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சாம்சங் இதை டைனமிக் AMOLED 2X பேனல் என்று அழைக்கிறது. இது நம்பமுடியாத அளவிற்கு பிரகாசமானதாக மற்றும் தெளிவானதாக இருக்கிறது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் போன்றவைகளையும் ஆதரிக்கிறது.
நம்பி வாங்க காரணம் 03 - இதன் ப்ராசஸர்: இப்போதைக்கு ஒட்டுமொத்த டெக் உலகமும் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பற்றித்தான் பேசுகிறது. இதற்கு முந்தைய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2-வை தான் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா பேக் செய்கிறது. இன்றைய தரத்தின்படி, இது மிகவும் வேகமான மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.
நம்பி வாங்க காரணம் 04- இதன் எஸ் பென் ஆதரவு: கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை வாங்குவதற்கு எஸ் பென் ஸ்டைலஸ் ஒரு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். இது குறிப்புகளை எடுப்பது, வரைதல் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல்துறை கருவியாகும்.
வாங்காமல் தவிர்க்க ஒரே ஒரு காரணம் - கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் அறிமுகம்: ஆம்! சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை அறிமுகம் செய்ய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. ஒப்பீட்டளவில் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலானது பல வகையான மேம்பாடுகளை பெறும்.
நிச்சயம் எஸ்24 அல்ட்ராவானது இன்னும் சிறப்பான ஸ்மார்ட்போனாக இருக்கும். இன்னும் அதிக சக்திவாய்ந்த ப்ராசஸர், இன்னும் சிறந்த கேமரா செட்டப், இன்னும் பிரகாசமான டிஸ்பிளே மற்றும் தற்போதைய 45வாட்ஸ்-ஐ விட வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இந்த இடத்தில் எஸ்24 அல்ட்ராவானது ரூ.1 லட்சத்திற்குள் (நிச்சயமாக) அறிமுகம் ஆகாது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம். உங்களுக்கு பட்ஜெட் சிக்கல் இருந்தால் எஸ்23 அல்ட்ராவை இப்போதே வாங்கி விடவும். மாறாக நீங்கள் ஒரு "பெஸ்ட்-ஆஃப்-பெஸ்ட் ஸ்மார்ட்போனை" வாங்க நினைத்தால்.. இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருந்து எஸ்24 அல்ட்ராவை வாங்கவும்.


Click it and Unblock the Notifications








