Samsung போன்களில் புது பிரச்சனை.. சட்டுனு தீரும் பேட்டரி.. ஏன்? எந்தெந்த மாடல்களில்? என்ன செய்ய வேண்டும்?
சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களுக்கான லேட்டஸ்ட் ஒன் யுஐ 7 ஓஎஸ் அப்டேட் (One UI 7 OS Update) ஆனது.. முதலில் "எப்போ தான் பா வரும்?" என்று பலரையும் கேட்க வைத்தது; இப்போது "ஏன் தான் வந்துச்சோ!" என்று சிலரை புலம்ப வைத்து உள்ளது.
என்ன ஆகிற்று? ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங்கின் ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது சமீபத்தில் கேலக்ஸி எஸ்23 சீரிஸில் வெளியானது. இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த சில பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவில் பேட்டரி ட்ரெயின் ஆவதாகாக புகாரளித்துள்ளனர்.

இது இரண்டாவது முறை: புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆடியோ ஏரேசர் போன்ற கேலக்ஸி ஏஐ அம்சங்களால் நிரம்பிய சாம்சங்கின் ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது ஆரம்பத்திலேயே ஒரு பக் (Bug) பிரச்சனையில் சிக்கியதும்; அதை தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட் சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அப்படியாக சரி செய்யப்பட்ட அப்டேட் ஆனது இப்போது மீண்டும் - சாம்சங் கேலக்ஸி எஸ்23, சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா - ஸ்மார்ட்போன்களில் பேட்டரி லைஃப் சிக்கலை கொண்டுவந்துள்ளது, சாம்சங் பயனர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.

பயனர்கள் கதறல்: சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் ஒரு ரெடிட் பயனர், ரெடிட் மற்றும் யூட்யூப் பயன்பாட்டிற்காக "ஒரு நாளைக்கு பல முறை" சார்ஜ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்த எல்லோரும் இந்த சிக்கலை சந்திக்கவில்லை. சில சாம்சங் கேலக்ஸி எஸ்23 பயனர்கள், ஒன் யுஐ 6 அப்டேட் உடன் ஒப்பிடும்போது புதிய ஒன் யுஐ 7 அப்டேட் வழியாக தாங்கள் பேட்டரி லைஃப் சிக்கலை சந்திக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எதை நம்புவது? லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்களுக்கு பிறகு பேட்டரி ட்ரெயின் மற்றும் ஹீட்டிங் சிக்கல்ககளை சந்திப்பது - ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கு ஒன்றும் புதிதல்ல - இதில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அடங்கும். மேஜர் அப்டேட்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி உகப்பாக்கத்தை மீட்டமைக்கும் என்று நம்பப்படுகிறது, இது உங்கள் பயன்பாட்டு முறைகளை - பயன்பாட்டு பழக்கவழக்கங்கள் அல்லது ஸ்க்ரீன் டைம் போன்றவைகளை - வரும் நாட்களில் கற்றுக்கொள்கிறது.

ஒரு புதிய ஸ்மார்ட்போன் துவக்கத்திலிருந்தே உங்கள் பயன்பாட்டு முறைகளைக் கற்றுக்கொள்ள தொடங்கும். பின்னர் 1 வருடம் கழித்து, நீங்கள் ஒரு மேஜர் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யும் போது, உங்கள் பயன்பாட்டு முறைகளைக் கற்றுக்கொள்ள அதற்கு குறைந்தது ஒரு வாரம் தேவைப்படும். இதேபோன்ற ஒரு வாரம் காலம் - கேலக்ஸி எஸ்23 சீரிஸில் உள்ள பேட்டரி ட்ரெயின் சிக்கலை சரி செய்யுமா என்பதற்கான பதிலை - காலம் தான் சொல்ல வேண்டும்.
சாம்சங்கின் லேட்டஸ்ட் ஒன் யுஐ7 அப்டேட்டை டவுன்லோட் செய்வது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஒன் யுஐ7 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் > டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் என்பதற்கு செல்லவும். உங்கள் மாடலுக்கு அப்டேட் வந்து இருந்தால், அது தானாகவே பதிவிறக்க தொடங்கும். அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, போதுமான பேட்டரி அளவு கொண்டு ள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

2025 ஜூன் மாதத்திற்குள்.. எந்தெந்த Samsung போன்களுக்கு One UI 7 Update கிடைக்கும்? 2025 மே மாதத்தில், கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 Series), கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Galaxy S22 Series), கேலக்ஸி எஸ்21 சீரீஸ் (Galaxy S21 Series), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5), கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10, கேலக்ஸி டேப் எஸ்9, மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் டேப்லெட்ககளுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பின்னர் ஜூன் மாதத்தில், கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s), கேலக்ஸி ஏ06 (Galaxy A06), கேலக்ஸி ஏ14 (Galaxy A14), கேலக்ஸி ஏ14 5ஜி (Galaxy A14 5G), கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G), கேலக்ஸி ஏ16 5ஜி (Galaxy A16 5G), கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G), கேலக்ஸி ஏ33 5ஜி (Galaxy A33 5G), கேலக்ஸி ஏ34 5ஜி (Galaxy A34 5G), கேலக்ஸி ஏ35 5ஜி (Galaxy A35 5G), கேலக்ஸி ஏ53 5ஜி (Galaxy A53 5G), கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G), கேலக்ஸி ஏ55 5ஜி (Galaxy A55 5G), மற்றும் கேலக்ஸி ஏ73 5ஜி (Galaxy A73 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டை பெறும்.

இதோடு கேலக்ஸி எப்05, கேலக்ஸி எப்14, கேலக்ஸி எப்14 5ஜி, கேலக்ஸி எப்15 5ஜி, கேலக்ஸி எப்16 5ஜி, கேலக்ஸி எப்34 5ஜி, கேலக்ஸி எப்54 5ஜி மற்றும் கேலக்ஸி எப்55 5ஜி ஆகியவற்றுடன் கேலக்ஸி எம்05, கேலக்ஸி எம்14, கேலக்ஸி எம்14 5ஜி, கேலக்ஸி எம்15 5ஜி, கேலக்ஸி எம்16 5ஜி, கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்34 5ஜி, கேலக்ஸி எம்35 5ஜி, கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி எம்55 5ஜி மற்றும் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் கிடைக்கும்
ஒன் யுஐ 7 வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்கள்: ஏற்கனவே உள்ள ப்ரவுஸிங் அசிஸ்ட் (Browsing Asist) அம்சத்தில் டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் (Text to Speech) திறன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நௌவ் பார் (Now Bar) அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அன்றைய நேரத்திற்கு ஏற்ப தொடர்புடைய தகவல்களை காட்டும்
மேலும் பில்ட்-இன் வீடியோ எடிட்டர் (Built-in video editor) மற்றும் அதன் ஆடியோ ஏரேசர் அம்சத்தை (Audio Eraser feature) பயன்படுத்தி, வீடியோக்களில் இருந்து காற்று போன்ற தேவையற்ற சத்தங்களை இப்போது நீக்க முடியும். கூடவே கால் அசிஸ்ட் மற்றும் லைவ் டிரான்ஸ்லேட் (Call Assist and Live Translate) போன்ற விஷயங்களுக்கு சாம்சங் மேலும் பல மொழிகளுக்கான ஆதரவை சேர்த்துள்ளது. கடைசியாக சாம்சங் நோட்ஸ் (Samsung Notes) போன்ற சாம்சங் நிறுவனத்தின் ஆப்களில் கூகுள் ஜெமினி (Google Gemini) அம்சங்களை பயனர்கள் அணுகலாம்.


Click it and Unblock the Notifications