OnePlus-க்கு ஆப்பு வைக்க பார்க்கிறதா Samsung? Samsung Galaxy S23 இன் புது லைம் நிறம்! விலை என்ன?
சாம்சங் நிறுவனம் இப்போது அதன் Samsung Galaxy S23 போனை லைம் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இது என்ன விலையில் வாங்க கிடைக்கவுள்ளது? இதன் மீது என்ன சலுகை மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பது போன்ற தகவலை தான் பார்க்கப்போகிறோம்.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில், அதன் OnePlus Nord CE 3 Lite என்ற மாடலை லைம் எல்லோவ் என்ற புதிய எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்தது. இது உலகளவில் மிகவும் விரும்பப்பட்ட பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போனாக மாறியது. இதே நிறத்தை இப்போது சாம்சங் நிறுவனம் வெளிகொண்டுவந்துள்ளது ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய திருப்புமுனையை உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S23 போனை லைம் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவும், பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் மாடலின் நிறத்தை போலவே அமைந்துள்ளது. Samsung Galaxy S23 5G இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை பாண்டம் பிளாக், கிரீம், க்ரீன் மற்றும் லாவெண்டர் நிறங்களில் அறிமுகமானது.
இப்போது, இத்துடன் லைம் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. சாம்சங் மற்ற வகைகளின் அதே விலையில் புதிய லைம் வண்ண விருப்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சாதனம் லைம் கலர் ஆப்ஷன் மே 16 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் ரூ.74,999 விலையில் கிடைக்கிறது.
இதன் 256ஜிபி மாடல் ரூ.79,999 விலையில் கிடைக்கிறது. Samsung Galaxy S23 இன் லைம் நிற புது வேரியண்ட் மாடலின் அறிமுக சலுகையாக, ரூ.5000 முதல் ரூ.8,000 வரையிலான வங்கி கேஷ் பேக் நன்மைகளை பெறலாம். இதன் மூலம், Samsung Galaxy S23-வின் 128ஜிபி மாடலின் விலை ரூ.61,999 ஆகவும், இதன் 256ஜிபி மாடலின் விலை ரூ.66,999 என்ற விலையிலும் கிடைக்கும்.

இந்த Samsung Galaxy S23 ஸ்மார்ட்போன் ஆனது முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.1' இன்ச் டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 48Hz மற்றும் 120Hz இடையிலான ரெஃப்ரஷிங் ரேட்டை ஆதரிக்கிறது. இது 1750 nits பீக் பிரைட்னஸ் உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 லேயரைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த டிவைஸ் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட்டை (Snapdragon 8 Gen 2) கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது.
பின்புறத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50MP பிரைமரி கேமரா உள்ளது, 120-டிகிரி 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OISக்கான ஆதரவுடன் 10MP டெலிஃபோட்டோ கேமரா இதில் உள்ளது. செல்ஃபிக்கு முன்பக்கத்தில் 12MP கேமரா உள்ளது. இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான One UI 5.1 உடன் வருகிறது. இது நான்கு முக்கிய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஆதரவைப் பெறும்.
இது 25W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 3900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் சார்ஜரை பெட்டியில் இணைக்கவில்லை, ஆனால் நீங்கள் ஃபோனுடன் USB Type-C கேபிளைப் பெறுவீர்கள். சரி, இந்த போனை நீங்கள் வாங்குவீர்களா? அல்லது மாட்டீர்களா? இதில் எது பிடித்துள்ளது? எது பிடிக்கவில்லை என்று கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








