Home
News

வெயிட்டிங் ஓவர்.. தாறுமாறான ஸ்பெக்ஸ்.. அலறவிடும் விலை.. புது Samsung Galaxy S23 FE-ல அப்படி என்ன இருக்கு?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE) என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் இன்னும் சில தயாரிப்புகளையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE) ஆனது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ (Samsung Galaxy Tab S9 FE) மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ (Samsung Galaxy Buds FE) ஆகியவற்றுடன் புதனன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த போனை குறிப்பிடப்படாத சிப்செட்டுடன் பட்டியலிட்டுள்ளது.

வெயிட்டிங் ஓவர்.. தாறுமாறான ஸ்பெக்ஸ்.. புது Samsung Galaxy S23 FE..

இந்த போன் ஒற்றை ஸ்டோரேஜ் மாடலுடன் வழங்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் இது விற்பனைக்கு வர உள்ளது. இது ஜனவரி 2021 இல் எக்சினோஸ் 2100 சிப்செட் (Exynos 2100 SoC) மற்றும் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ (Samsung Galaxy S21 FE) மாடலை தொடர்ந்து வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ விலை என்ன (Samsung Galaxy S23 FE Price)?
சமீபத்திய ஒரு அறிக்கையில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனின் விலை $599 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 49,800 என சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. சாம்சங் மலேசியா தளத்தில் இந்த சாதனம் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது கிரீம் (Cream), கிராஃபைட் (Graphite), மின்ட் (Mint) மற்றும் பர்பிள் (Purple) வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் சாம்சங் அதிகாரப்பூர்வ தளத்தில் இண்டிகோ (Indigo) மற்றும் டேன்ஜரின் (Tangerine) வண்ணங்களில் பிரத்தியேகமாக கிடைக்கும். Samsung Galaxy S23 FE இன் அமெரிக்க பட்டியலின் படி, இது அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வரும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ சிறப்பம்சம் (Samsung Galaxy S23 FE Specifications) :
இது 6.4' இன்ச் டைனமிக் முழு-எச்டி+ AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது. இது 2.8GHz வரையிலான ஆக்டா கோர் (octa-core SoC) உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. முந்தைய அறிக்கைகளின்படி, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Gen 1) அல்லது இன்-ஹவுஸ் எக்சினாஸ் 2200 (Exynos 2200) சிப் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெயிட்டிங் ஓவர்.. தாறுமாறான ஸ்பெக்ஸ்.. புது Samsung Galaxy S23 FE..

இந்த போன் டிரிபிள் ரியர் ஃப்ளோட்டிங் கேமரா அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ராவைடு லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 10 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் கொண்டுள்ளது.

இது டூயல் நானோ சிம்-ஆதரவு, யுஎஸ்பி (USB) டைப்-சி போர்ட் வழியாக 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 30 நிமிடங்களில் ஃபோனை பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் என்று கூறுகிறது. இது Wi-Fi, GPS, NFC மற்றும் ப்ளூடூத் 5.3 இணைப்புகளையும் ஆதரிக்கிறது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூப் IP68 மதிப்பீட் உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 FE Launched Know The Price Specifications and Sale Date Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X