மெர்சலான அம்சங்களுடன் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இன்று ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமாக நிகழ்த்திய சாம்சங் Galaxy Unpacked 2022 நிகழ்வில் இந்த ஆண்டிற்கான முதல் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களான சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22), சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S22 Ultra 5G) ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் இப்போது இந்த ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி அறிமுகம்
சாம்சங் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள, சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22), சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S22 Ultra 5G) ஆகிய மூன்று புதிய எஸ் 22 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் உயர் வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி மாடல் இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் உயர் அம்சங்களுடன், சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 5ஜி இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே விபரம்
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 3080 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.80' இன்ச் அளவு கொண்ட உயர் திறன் Dynamic AMOLED 2x டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120 Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR 10 மற்றும் HDR+ ஆதரவையும் ஆதரிக்கிறது. டிஸ்பிளேவின் முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கட்டவுட் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே பாதுகாப்பைப் பலப்படுத்த கார்னிங் கொரில்லா கிளாஸ் Victus+ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விபரம்
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட் போன் நாம் எதிர்பார்த்ததை போல்12GB RAM உடன் வருகிறது. Samsung Galaxy S22 Ultra ஆனது பல்வேறு விதமான ஸ்டோரேஜ் விருப்பத்துடன் ஸ்மார்ட்போன் சந்தைகளில் விற்பனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி, புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 128GB 8GB RAM, 256GB 12GB RAM, 512GB 12GB RAM, 1TB 12GB RAM ஆகிய வேறுபாட்டுடன் விற்பனைக்கு வெளிவரும். சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 1TB மாடல் குறிப்பிட்ட சில சந்தைகளில் மட்டும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சிப்செட் மற்றும் இயங்குதளம்
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டில் 12 இல் இயங்கும். இதன் மேல் சாம்சங் நிறுவனத்தின் Samsung One UI 4.1 இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் octa-core 4nm சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்யும் பயனர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹை வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலில் உங்களுக்குக் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான மெமரி ஸ்லாட் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பொறுத்த வரையில், இது f/1.8 துளையுடன் கூடிய 108 மெகாபிக்சல் (wide) முதன்மைக் கேமராவைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பேக் செய்கிறது. இத்துடன் f/2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் (ultrawide) கேமரா, f/4.9 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (periscope telephoto) கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (telephoto) கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் பேஸ் டிடெக்ட் ஆட்டோஃபோகஸ் உள்ளது. இதில் செல்ஃபிக்களுக்காக ஒரு முன்பக்க கேமரா f/2.2 துளை கொண்ட 40 மெகாபிக்சல் முதன்மை கேமராவையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பேட்டரி விபரம்
Samsung Galaxy S22 Ultra ஆனது 5000mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது USB Power Delivery 3.0 அம்சம், பாஸ்ட் Qi/PMA வயர்லெஸ் சார்ஜிங் 15W அம்சம் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் 4.5W அம்சத்துடன், எஸ் பென் அம்சத்துடன் வருகிறது. இது பாண்டம் பிளாக், வைட், பர்கண்டி, கிறீன் நிறங்களில் வெறும் 1,199 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி ரூ. 89,700 ஆகும். Samsung Galaxy S22 Ultra இன்று முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் துவங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications