Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு அறிமுகம்- இது பக்கா பச்சை பாஸ்: விலை மற்றும் சலுகை

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்தின் புதிய வண்ண மாறுபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பேண்டம் பிளாக், பேண்டம் வைட் மற்றும் பர்கன்டி வண்ண விருப்பங்களில் அறிமுகமான நிலையில் தற்போது இந்த சாதனம் பச்சை வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனமானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் பச்சை வண்ண மாறுபாடு கிடைக்கிறது. இந்த சாதனமானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

புதிய வண்ண மாறுபாடு அறிமுகம்

புதிய வண்ண மாறுபாடு அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்தின் புதிய வண்ண மாறுபாடு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்தின் புதிய பச்சை நிற மாறுபாடு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த சாதனம் பச்சை வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனமானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் பச்சை வண்ண மாறுபாடு கிடைக்கிறது. இந்த சாதனமானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

பச்சை வண்ண மாறுபாடு

பச்சை வண்ண மாறுபாடு

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா பச்சை வண்ண மாறுபாடு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.1,09,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான்.காம் மூலமாக வாங்குவதற்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா தள்ளுபடி விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் படி, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா புதிய வண்ண மாறுபாட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி வாட்ச் 4 சாதனம் ரூ.2,999 என்ற சலுகை விலையில் கிடைக்கும். கூடுதலாக சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், கேலக்ஸி இசட் ஃபோல்ட்சீரிஸ் மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் சீரிஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000 மேம்படுத்தல் போனஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் பிற டிவைஸ் வைத்திருப்பவர்கள் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா பச்சை வண்ண மாறுபாடு வாங்கும் போது ரூ.5000 மேம்படுத்தல் போனஸ் கிடைக்கும். அதேபோல் சாம்சங் ஃபைனான்ஸ்+ அல்லது எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் வாங்க விரும்பினால் ரூ.5000 கேஷ்பேக் போனஸ் வழங்கப்படுகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் + பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் + பாதுகாப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் உயர் அம்சங்களுடன், சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 5ஜி இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 3080 x 1440பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.80' இன்ச் அளவு கொண்ட உயர் திறன் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120 ஹெர்டஸ் புதுப்பிப்பு வீத காட்சி கொண்ட டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்பிளே எச்டிஆர் 10 மற்றும் எச்டிஆர+ ஆதரவையும் ஆதரிக்கிறது. டிஸ்பிளேவின் முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கட்டவுட் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே பாதுகாப்பைப் பலப்படுத்த கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் + பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

12 ஜிபி ரேம் அம்சம்

12 ஜிபி ரேம் அம்சம்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றிப் பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் நாம் எதிர்பார்த்ததை போல் 12 ஜிபி ரேம் உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டில் 12 இல் இயங்கும். இதன் மேல் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் ஒன் யூஐ 4.1 இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் 4என்எம் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்யும் பயனர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹை வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலில் உங்களுக்குக் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான மெமரி ஸ்லாட் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பொறுத்த வரையில், இது எஃப்/1.8 துளையுடன் கூடிய 108 மெகாபிக்சல் (வைட்) முதன்மைக் கேமராவைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பேக் செய்கிறது. இத்துடன் எஃப்/2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் (அல்ட்ரா) கேமரா, எஃப்/4.9 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (பெரிஸ்கோப் டெலிபோட்டோ) கேமரா மற்றும் எஃப்/2.4 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (டெலிபோட்டோ) கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் பேஸ் டிடெக்ட் ஆட்டோஃபோகஸ் உள்ளது. இதில் செல்ஃபிக்களுக்காக ஒரு முன்பக்க கேமரா எஃப்/2.2 துளை கொண்ட 40 மெகாபிக்சல் முதன்மை கேமராவையும் கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

5000 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட்ஸ் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது யூஎஸ்பி பவர் டெலிவரி 3.0 அம்சம், பாஸ்ட் க்யூஐ/பிஎம்ஏ வயர்லெஸ் சார்ஜிங் 15 வாட்ஸ் அம்சம் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் 4.5 வாட்ஸ் அம்சத்துடன், எஸ் பென் அம்சத்தையும் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 Ultra Smartphone's New Variant Launched in India: Price, Specs Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X