Home
News

வாங்க ரெடியா- மார்ச் 11 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ்- இலவசத்தை அள்ளுங்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் இந்தியாவில் மார்ச் 11 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 23 முதல் முன்பதிவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்கள், சாம்சங் பிரத்யேக கடைகள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான்.இன் தளங்களில் மார்ச் 10 ஆம் தேதி வரை முன்பதிவு நடைபெறும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர்: விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர்: விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 சாதனத்தின் விலை இந்தியாவில் ரூ.76,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.72,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டின் விலை ரூ.84,999 ஆக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.84,999 ஆகவும் இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.88,999 ஆக இருக்கிறது. இரண்டு மாடல்களும் பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் மற்றும் க்ரீன் ஆகிய வண்ண விருப்பங்களோடு கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்தின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ.1,09,999 ஆக இருக்கிறது. அதேபோல் பர்கண்டி, பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ.1,18,999 ஆக இருக்கிறது. இந்த சாதனமும் பர்கண்டி மற்றும் பாண்டம் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

சாம்சங் கவர்ச்சிகரமான சலுகைகள்

சாம்சங் கவர்ச்சிகரமான சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது சாம்சங் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,999 விலை மதிப்புள்ள கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 சாதனம் வாங்கும் போது ரூ.11,999 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் 2 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களை பெறுவார்கள். கேலக்ஸி எஸ் மற்றும் கேலக்ஸி நோட் சீரிஸ் போனை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.8000 மேம்படுத்தப்பட்ட போனஸ் கிடைக்கிறது.

சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 5ஜி இணைப்பு

சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 5ஜி இணைப்பு

சாம்சங் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள, சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22), சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S22 Ultra 5G) ஆகிய மூன்று புதிய எஸ் 22 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் உயர் வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி மாடல் இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் உயர் அம்சங்களுடன், சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 5ஜி இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. ம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120 Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR 10 மற்றும் HDR+ ஆதரவையும் ஆதரிக்கிறது. டிஸ்பிளேவின் முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கட்டவுட் வழங்கப்பட்டது.

6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே

6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் ஒன் யூஐ 4.1 உடன் இயங்குகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் சாதனத்தின் கம்ஃபோர்ட் ஷீல்டுக்கான ஆதரவை கொண்டுள்ளது. அதோடு இது ப்ளூ லைட் கட்டுப்பாடு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1750 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உடன் இணைக்கப்பட்ட ஆக்டோ கோர் 4என்எம் எஸ்ஓசி வசதியைக் கொண்டுள்ளது. இது 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ கோணத்துடன் வருகிறது. அதேபோல் 50 எம்பி முதன்மை இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ் வைட் ஆங்கிள் சென்சாரையும் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 Series Sale Set March 11 in India: Exciting Offers, Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X