Home
News

ஆண்ட்ராய்டு 12, 50 எம்பி கேமரா, 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங்- அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்22+ : விலை இதோ!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி Unpacked 2022 ஆன்லைன் லைவ் மூலமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களான சாம்சங் கேலக்ஸி எஸ் தொடரில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செயதுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்22+, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு அதன் ரசிகர்கள் நீண்ட காலம் காத்திருந்தனர் என்றே கூறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ் தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 22 தொடரில் இடம்பெற்றுள்ள மூன்று சாதனங்கள் குறித்து பார்க்கையில் அவை சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்22+, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஆகும். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் முதல் நிலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உயர்நிலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது இரண்டுக்கும் இடைபட்ட நடுநிலை ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சிப்செட், சிறந்த கேமரா, சிறந்த பேட்டரி சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் ஒன் யூஐ 4.1 உடன் இயங்குகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் சாதனத்தின் கம்ஃபோர்ட் ஷீல்டுக்கான ஆதரவை கொண்டுள்ளது. அதோடு இது ப்ளூ லைட் கட்டுப்பாடு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1750 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உடன் இணைக்கப்பட்ட ஆக்டோ கோர் 4என்எம் எஸ்ஓசி வசதியைக் கொண்டுள்ளது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. இது 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ கோணத்துடன் வருகிறது. அதேபோல் 50 எம்பி முதன்மை இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ் வைட் ஆங்கிள் சென்சாரையும் கொண்டிருக்கிறது. அதோடு 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவோடு 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 10 மெகாபிக்சல் 80 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ ஆதரவோடு வருகிறது.

45 வாட்ஸ் வேகாமான சார்ஜிங் ஆதரவு

45 வாட்ஸ் வேகாமான சார்ஜிங் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என அல்ட்ராசோனிக் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஆனது 45 வாட்ஸ் வேகாமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எடை 196 கிராம் ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22+ Launched With Android 12, 50MP primary Camera, 45W Fast Charging and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X