Home
News

இந்திய விலை இதுவாக இருக்கலாம்: ஒரு சஸ்பென்ஸ் தான்- சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் விலை மற்றும் அம்சங்கள்!

சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் சாதனத்தை வெளியிட்டது. கேலக்ஸி அன்பேக்ட் 2022 நிகழ்வில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை இந்த தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்22 தொடர் ஸ்மார்ட்போன்களில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சமீபத்திய சிப்செட்களை கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடர் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் இந்தியாவில் பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டாலும், இந்தியாவில் இவற்றின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்தியாவில் எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து சில சமீபத்திய அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் எஸ் அல்ட்ரா குறித்த விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் எஸ் அல்ட்ரா குறித்த விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் எஸ் அல்ட்ரா குறித்த விலை விவரங்கள் Mesmartprice இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த வெளியான அறிக்கைப்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்22-ன் அடிப்படை மாடல் இந்தியாவில் ரூ.69,900 விலையில் இருக்கிறது. கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா இந்தியாவில் ரூ.1,09,900 என இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடலின் விலை இதுவரை குறிப்பிடவில்லை. கேல்க்ஸி எஸ்22 அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் வேரியண்ட் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வகைகளில் வருகிறது. கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்துடன் வருகிறது. சேமிப்பகத்தில் குறுகிய வேறுபாடு இருந்தாலும் ஒப்பீட்டளவில் அதிக விலை வித்தாயசம் காணப்படும். இந்த அறிக்கைகள் அதிகாரப்பூர்வமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் ஒன் யூஐ 4.1 உடன் இயங்குகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் சாதனத்தின் கம்ஃபோர்ட் ஷீல்டுக்கான ஆதரவை கொண்டுள்ளது. அதோடு இது ப்ளூ லைட் கட்டுப்பாடு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1750 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உடன் இணைக்கப்பட்ட ஆக்டோ கோர் 4என்எம் எஸ்ஓசி வசதியைக் கொண்டுள்ளது.

கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே வசதிக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 4என்எம் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 3080 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.80' இன்ச் அளவு கொண்ட உயர் திறன் Dynamic AMOLED 2x டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120 Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR 10 மற்றும் HDR+ ஆதரவையும் ஆதரிக்கிறது. டிஸ்பிளேவின் முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கட்டவுட் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே பாதுகாப்பைப் பலப்படுத்த கார்னிங் கொரில்லா கிளாஸ் Victus+ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22, Galaxy S22+, Galaxy S22 Ultra Price Details in India: Leaked Info
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X