Home
News

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ பற்றிய சுவாரசிய தகவல்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த சாதனத்தின் மேனுவல் கைடு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் வராது என்பதை குறிப்பிடுகிறது. இத்துடன், பயனர் கையேடு சில முக்கிய குறிப்புகள் மற்றும் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை உறுதி செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ ஸ்மார்ட்போன்

மெட்டல் ஹவுசிங் இல்லாவிட்டாலும், வழக்கமான சாம்சங் கேலக்ஸி எஸ் 21 போன்ற வடிவமைப்புடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ மைக்ரோ எஸ்டி ஆதரவுடன் வராமல் போகலாம் என்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கையேடு வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய சில குறிப்புகளை உறுதி செய்கிறது. இது வாட்டர் மற்றும் டேஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 மதிப்பீடு பெட்ரா சான்றிதழ் உடன் வருகிறது.

டால்பி அட்மோஸ், வயர்லெஸ் டெக்ஸ் போன்ற ஏராளமான அம்சங்கள்

டால்பி அட்மோஸ், வயர்லெஸ் டெக்ஸ் போன்ற ஏராளமான அம்சங்கள்

இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் உயர் புதுப்பிப்பு வீத டிஸ்பிளே ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டால்பி அட்மோஸ், வயர்லெஸ் டெக்ஸ், சாம்சங் பே, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். இந்த ஸ்மார்ட்போனின் சார்ஜர் சாதனத்தின் பெட்டி உடன் சேர்க்கப்படாது என்று பயனர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது சாம்சங் பயனர்களைக் கவலைப்படச் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S21 FE டிசைன் எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி S21 FE டிசைன் எப்படி இருக்கும்?

பயனர்கள் சம்சுங்க பயனர்களாக இருந்தால், அவர்கள் பயன்படுத்தி வரும் அவர்களின் பழைய சார்ஜ்ரை பயன்படுத்தலாம் அல்லது புதிதாக ஒரு யூஎஸ்பி டைப்-சி சார்ஜரை தனியாக வாங்க வேண்டும். அதேபோல், 3.5 மிமீ ஆடியோ ஜாக் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இயில் காணவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பயனர் கையேட்டில் காணப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S21 FE வெண்ணிலா கேலக்ஸி 21 மாடலுக்கு ஒத்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

எந்த சிப்செட் இந்த சாதனத்துடன் வரும்?

எந்த சிப்செட் இந்த சாதனத்துடன் வரும்?

சாம்சங் சாதனத்தின் பயனர் கையேடு இந்த புதிய ஸ்மார்ட்போன் நான்கு வண்ண விருப்பங்களையும் காட்டுகிறது. இதில் ப்ளாக், க்ரீன், வயலட் மற்றும் வைட் வாங்க விருப்பங்களில் அறிமுகமாகும். இருப்பினும், கேலக்ஸி எஸ் 21 எஃப்இ சில சந்தைகளில் எக்ஸினோஸ் 2100 சிப்செட் உடன் வரக்கூடும் என்றும் மற்றவற்றில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆல் இயக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்படலாம் என்று ஆண்ட்ராய்டு 11 உடன் வரலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE User Manual Surfaces Online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X