Samsung Galaxy S21 FE விரைவில் அறிமுகமா? இந்த ஃபேன் எடிஷனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? ​

|

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஃபேன் எடிஷன் (எஃப்இ) ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (CES) அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy S21 FE சாதனத்தை வெளியிடப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, இந்த போன் தென் கொரியாவில் வெளியிடப்படாது மற்றும் ஜனவரி நடுப்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும். அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது?

சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது?

சாம்சங் கேலக்ஸி S21 FE தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதால் ஆசியச் சந்தைகளும் இந்த புதிய Samsung Galaxy S21 FE சாதனத்தைக் காணப் போகின்றது என்று கூறப்பட்டுள்ளது. Samsung Galaxy S21 FE பற்றி இப்போது வரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இதோ. இந்த ஸ்மார்ட்போன் Geekbench தரப்படுத்தல் தளத்திலும் காணப்பட்டது. இது மாடல் எண் SM-G990E கொண்ட சாம்சங் ஃபோனும் கீக்பெஞ்ச் பட்டியலில் பட்டியலிடப்பட்டது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் ஆன்லைனில் கசிந்தது. வதந்தியான அறிக்கைகளின்படி, இந்த மாடல் எண் Samsung Galaxy S21 Fan Edition ஸ்மார்ட்போனைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸினோஸ் 2100 சிப்செட் இயங்குகிறதா Samsung Galaxy S21 FE

எக்ஸினோஸ் 2100 சிப்செட் இயங்குகிறதா Samsung Galaxy S21 FE

இந்த ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 2100 சிப்செட் உடன் இயங்கும் என்பதை சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியலின் தகவல் காண்பிக்கிறது. பட்டியலில் வெளிப்படுத்தப்பட்ட மற்ற தகவல்கள் சாதனத்திற்கான CPU ஆகும். கைபேசியில் ஒரு பிரைம் CPU கோர் 2.91 GHz இல் இயங்குகிறது. மற்ற மூன்று CPU கோர்கள் 2.81 GHz இல் இயங்குகிறது, மேலும் நான்கு கூடுதல் CPU கோர்கள் 2.21 GHz இல் இயங்குகிறது. சாதனம் பட்டியலிடப்பட்ட படி Android 11 இல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் SoC ஆனது 8GB RAM மூலம் ஆதரிக்கப்படும்.

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விபரம்

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விபரம்

முந்தைய S21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் Snapdragon 888 அல்லது Exynos 2100 இல் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Samsung Galaxy S21 FE சிப் சந்தையைப் பொறுத்தது. இந்த புதிய சாதனம் 8GB / 12GB LPDDR5 ரேம் மற்றும் 128GB / 256GB UFS 3.1 சேமிப்பகத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. சாம்சங்கிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 6.41' இன்ச் கொண்ட AMOLED உடன் கூடிய FHD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கிறதா?

25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கிறதா?

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மூலம் 4500 எம்ஏஎச் பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Samsung Galaxy S21 FE சாதனத்தின் கேமரா 12MP பிரதான கேமரா, 12MP அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 8MP டெலிஃபோட்டோ கேமரா உட்பட மூன்று பின்புற கேமராக்களுடன் 32MP முன் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G விற்பனை விபரம்

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G விற்பனை விபரம்

​இதற்கு முன்னர் சாம்சங் நிறுவனம் FE பதிப்பில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி S20 FE 5G விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி S20 FE 5G சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~407 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. இநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் 2 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 (7nm) பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 650 ஜிபியு, 8 GB LPDDR5 ரேம் 128 GB சேமிப்புதிறன் (UFS 3.1) மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 1 TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G ஸ்போர்ட் 12 MP (f /1.8, rear) + 8 MP (f /2.4, தொலைபேசி) + 12 MP (f /2.2, அல்ட்ரா வைடு) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் OIS, கைரோ-EIS, எச்டிஆர், பனாரோமா, AI கேமரா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0, வைடு) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S20 FE 5G சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு. சாம்சங் கேலக்ஸி S20 FE 5G இயங்குளதம் ஆண்ராய்டு 11 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE Smartphone Spotted With Exynos 2100 Chipset : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X