ரூ.999 இருந்தால் போதும்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ இப்போதே முன்பதிவு செய்யலாம்!

|

சாம்சங் சமீபத்திய இரண்டாவது ஜென் ஃபோன் எடிஷன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. சிஇஎஸ் 2022 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.999 என்ற முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு முன்கூட்டிய ஆர்டருக்கும் நிறுவனம் ஒரு பாராட்டு அறிவிப்பாக Galaxy SmartTag-ஐ வழங்குகிறது.

பின்புற பிளாஸ்டிக் வடிவமைப்பு

பின்புற பிளாஸ்டிக் வடிவமைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனமானது கேலக்ஸி எஸ்21 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா தொகுதியும் உட்படுத்தப்ட்டுள்ளது. வதந்திகளின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ இந்தியாவில் ஜனவரி 11 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் இணையதளம், சாம்சங் கடைகள் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் இது கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் இதற்கு சலுகைகள் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சம் குறித்து பார்க்கையில் இந்த சாதனத்தின் இந்திய மதிப்பு ரூ.48000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விலை விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் இந்திய விலை மதிப்புப்படி ரூ.70,400 ஆகவும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.75400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது கிராஃபைட் லாவெண்டர், ஆலிவ் மற்றும் வெற்றை வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது.

120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா

120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் சாதனத்தின் இந்திய அறிமுகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்-ன் இந்த கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி குறித்த வதந்திகள் சமீப காலமாக வெளியாகின. இதையடுத்து இந்த சாதனம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படும்

ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படும்

ஆண்ட்ராய்டு 12 இல் இயக்கப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயக்கப்படும் எனவும் இது யூஐ 4 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 888 அல்லது எஸ்கினோஸ் 2100 மூலம் இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் இயக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE smartphone is available in India for a pre-order of Rs.999: Reports Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X