120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 32எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகம்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை இதோ!

|

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.70,200 என கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு வதந்தி தகவல்கள் இந்த சாதனம் குறித்து வெளியான நிலையில் தற்போது இந்த சாதனம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 சாதனத்தின் மாறுபட்ட பதிப்பாகவும் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ சாதனத்தின் வாரிசாகவும் இந்த சாதனம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. கேலக்ஸி எஸ்20 எஃப்இ சாதனத்தின் வாரிசான சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனம் மேம்படுத்தப்பட்ட நைட் பயன்முறை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய போன் அதே கான்டர் கட் ப்ரேம் வடிவமைப்பு மற்றும் உயர்த்தப்பட்ட பின்புற கேமரா தொகுதியுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம். சாம்சங் யுகே இணையதளத்தில் இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.70200 ஆக இருக்கிறது. அதேபோல் 256 ஜிபி உள்சேமிப்பு வேரிண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.75200 ஆக இருக்கிறது. கிராஃபைட், லாவெண்டர், ஆலிவ் மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த போன் ஜனவரி 11 முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்

அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சமீபத்திய தகவலின்படி, இந்த போன் அதன் உலகளாவிய அறிமுகத்துடன் நாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் சாதனத்தின் இந்திய அறிமுகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்-ன் இந்த கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி குறித்த வதந்திகள் சமீப காலமாக வெளியாகின. இதையடுத்து இந்த சாதனம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயக்க ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 இயக்க ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயக்கப்படும் எனவும் இது யூஐ 4 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 888 அல்லது எஸ்கினோஸ் 2100 மூலம் இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

12 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்

12 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் இயக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்- டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. 25 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்வதற்கு என சாம்சங்கின் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம் இந்த போனில் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஆனது ஐபி68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பில் வருகிறது. இது தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்துடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE 5G Launched with 120Hz AMOLED Display, 32MP Selfie Camera and More: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X