இதுல இது மட்டும்தான் வித்தியாசம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி சிறப்பம்சங்கள்!

|

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்புப்படி ரூ.41,300 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி ஸ்மார்ட்போன் ஜெர்மனி, மலேசிய மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சந்தைகளில் முன்னறிவிப்பின்றி சைலண்டாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது மாதிரி எண் எஸ்எம்-ஜி780ஜி எஸ்ஓசி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அசல் கேலக்ஸி எஸ்20 எஃப்இ மாறுபாடு எண்ணான எஸ்எம்-ஜி780எஃப் உடன் சற்றே மாறுபட்டதாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி கடந்தாண்டு இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகமான அசல் சாதனத்துடன் ஒத்துப்போகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் விலை குறித்து பார்க்கையில் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.41,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கூட்டாளர்களின் அதிகாரப்பூர்வ சில்லறை கடைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஷாப்பி ப்ளூ, ஆரஞ்சு மற்றும் வயலட் வண்ண விருப்பங்களில் பட்டியலில் காண்பிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ விலை

அதேபோல் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ மாறுபாடானது ஜெர்மனி, மலேசியா, வியட்நாம் இகாமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.49,999 எனவும் மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ரூ.55,999 எனவும் வந்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் புதிய வேரியண்டுக்குமான வித்தியாசம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி சாதனமானது ஸ்னாப்டிராகன் 865 தவிரத்து பிற அம்சங்கள் அனைத்தும் பழைய மாடலுக்கு ஒத்ததாகவே இருக்கிறது. இந்த புதிய மாடலானது 8 ஜிபி ரேம் உடன் ஜோடியாக ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் உடன் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

சாம்சங் புதிய கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4ஜி மூலமாக இது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 190 கிராம் எடையை கொண்டிருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE 4G Smartphone Launching with Snapdragon 865 Chipset and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X