சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குதூகல இரவு!

By Super
|
சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குதூகல இரவு!

நேற்று முன் தினம் இரவு சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு இணையாக இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்புக்கு இனி சரியான விடை கிடைத்துவிடும். எத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது என்பதில் தொடங்கி, எவ்வளவு லாபத்தினை அடைந்து இருக்கிறது என்பதில் இருந்து, விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பிறகு, இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோனுக்கு சிறந்த போட்டியை ஏற்படுத்துமா? என்பது பெரிய பேச்சாக உள்ளது. ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் திரை 3.5 இஞ்ச் கொண்டது. ஆனால் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் திரை அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை கொண்டது.

இதனால் சரமாறியாக 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எக்ஸினோஸ் 4 குவாட் கோர் பிராசஸர் வேகமாக இயங்க செயல்படும்.

16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 மெமரி மாடல்களில் இந்த 2 ஸ்மார்ட்போனையுமே வாங்க முடியும். இதன் மெமரி வசதியினை பொருத்து தான் விலையும் வித்தியாசப்படும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டி என்ற பேச்சை, இனி அடுத்தாக ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மாற்றும் என்ற கருத்தும் உள்ளது.

எது எப்படியாக இருந்தாலும், நேற்றைய முன் தின இரவு சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குதூகல இரவாக இருந்திருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X