கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுக்கு ப்ரீ-ஆடர் ஆரம்பம்!

Posted By: Staff
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுக்கு ப்ரீ-ஆடர் ஆரம்பம்!

இந்த மாதம் அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் தொழில் நுட்ப உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு ப்ரீ-ஆடர்களும் குவிகின்றது.

இந்த சூப்பர் ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆடர் விவரங்களை பற்றி பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோர் எளிதாக ப்ரீ-ஆடர் செய்யலாம். இதற்கு முன்பணமாக ரூ.2,000 செலுத்த வேண்டும்.

அதோடு ப்ரீ-ஆடர் செய்யும் பொழுது அதன் விவரங்களை நன்கு படித்துவிட்டு அதன் பிறகு புக் செய்வது  நல்லது. ஏனெனில் ஆடர் செய்த பின்பு அதை எந்த காரணத்திற்கொன்றும் கேன்சல் செய்ய முடியாது. இந்த ப்ரீ-ஆடர்களுக்கு சிறப்பு பரிசும் உள்ளது. இதுவரை 90 லட்சம் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் ப்ரீ-ஆடர் செய்யப்பட்டுள்ளன.

4.8 இஞ்ச் திரை, சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பம், எக்ஸினோஸ் கூவாட் கோர் பிராசஸர், 8 மெகா பிக்ஸல் கேரமா என்று கலக்கும் இந்த ஸ்மார்ட்போன், வருகிற ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,000 ஆரம்ப விலையை கொண்டிருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot