அகன்ற திரையினை வழங்குமா கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போன்?

Posted By: Staff
அகன்ற திரையினை வழங்குமா கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போன்?

அசத்தலாக கேலக்ஸி-III எஸ் ஸ்மார்ட்போன் 4.65 அகன்ற திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி வரிசையில் மகத்தான வெற்றியை பெற்று இருக்கும் சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் கேலக்ஸி-III எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் பல சிறப்பான தொழில் நுட்பங்களை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் 4.65 சூப்பர் அமோல்டு ப்ளஸ் தொடுதிரையை வழங்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இது மட்டும் அல்லாமல் கேலக்ஸி-III ஸ்மார்ட்போனில் குவாட் கோர் எக்ஸைனோஸ் பிராசஸர், 8 முதல் 12 வரை கொண்ட மெகா பிக்ஸல் கேமரா, எல்டிஇ போன்ற தொழில் நுட்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனை மொபைல் மார்கெட்டில் பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்