2011ல் 2 கோடி கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விற்ற சாம்சங்!

Posted By:

2011ல் 2 கோடி கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விற்ற சாம்சங்!

சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு எகிடுதகிடாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக,கேலக்ஸி வரிசையை சேர்ந்த எஸ்-II ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், கடந்த ஆண்டு 2 கோடி கேலக்ஸி எஸ்-II ஸ்மார்ட்போன்களை சாம்சங் விற்பனை செய்துள்ளது.

மேலும், சாம்சங்கின் மொத்த விற்பனையில் இந்த போன் மிக முக்கிய பங்களிப்பையும் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் கேலக்ஸி எஸ்-II விற்பனைக்கு வந்தது. ஆனால், விற்பனையில் அந்த போன் சக்கை போடு போடுகிறது.

இந்த புதிய கேலக்ஸி எஸ்-II ஸ்மார்ட்போன் இந்த அளவு விற்பனையை எட்டி இருப்பது சாம்சங் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கும் சந்தோஷத்தை அளிக்கும் விஷயம் தான்.

2010-ஆம் ஆண்டில் சாம்சங் மொபைல்போன்களின் விற்பனையை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 9.5 மொபைல்போன்களை சாம்சங் விற்பனை செய்துள்ளது. அதேவேளை, ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு 9.3 கோடி ஐபோன்களை விற்றுள்ளது.

இதை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு மட்டுமே அதிகம். கடந்த ஆண்டு ஆப்பிளை விட சாம்சங்கின் மொபைல்போன் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot