Home
News

ஆன் தி வே ஆண்டவா.. ஸ்மார்ட்வாட்ச் கதை காலி.. வருகிறது கேலக்ஸி ரிங்.. சாம்சங் தரமான சம்பவம்!

கேலக்ஸி அன்பேக்டு 2024 (Galaxy Unpacked 2024) நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்களோடு சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால், விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்வாட்ச் கதை காலி.. வருகிறது கேலக்ஸி ரிங்.. சாம்சங் சம்பவம்!

இந்த போன்களோடு சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 (Samsung Galaxy Fit 3) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம்சங் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி ரிங்கின் டிசைன் மற்றும் கலர் குறித்த வீடியோவை வெளியிட்டு மிரட்டிவிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

ஏனென்றால், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் குறித்த தகவல்கள் கசிந்து மார்கெட்டை அதிர வைத்தது. அவ்வப்போது, அம்சங்களும் வெளியாகின. ஆனால், சாம்சங் நிறுவனமோ, அந்த ரிங் குறித்த எந்த தகவலையும் உறுதிபடுத்தாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் அதிகாரப்பூர்வமாக சாம்சங் கேலக்ஸி ரிங் குறித்த தகவலை வெளியிட்டு ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ரிங்கில் ஹெல்த் மானிட்டர்கள், டிராக்கர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு கன்ட்ரோல்களும் வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த ரிங் மூலம் ஸ்மார்ட்போன் கால்களை ஒரு சொடக்கின் மூலம் அட்டெண்ட் செய்வது மற்றும் கட் செய்வது போன்றவை செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்வாட்ச் கதை காலி.. வருகிறது கேலக்ஸி ரிங்.. சாம்சங் சம்பவம்!

அதேபோல ஒரேவொரு சொடக்கின் மூலம் டிவி, ஃபேன், லைட்ஸ் போன்ற பல்வேறு ஸ்மார்ட் டிவைஸ்களையும் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சாம்சங் ஹெல்த் பீட்டா ஆப் (Samsung Health Beta App) மூலம் இந்த ரிங்கை பயன்படுத்தலாம் என்று கடந்தாண்டே செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 மாடலில் வரும் ஹார்ட்ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப்பிங் மானிட்டர் போன்ற ஹெல்த் மானிட்டர்களும், ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றுக்கான ஆக்டிவிட்டி டிராக்கர்களும் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதன் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது, டிசைன் குறித்த விவரங்களை சாம்சங் வெளியிட்டுள்ளதால், வரும் நாட்களில் அதன் அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட், நாய்ஸ் போன்ற ஸ்மார்ட் ரிங்குகளுக்கு மத்தியில் இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் மிகப்பெரும் புரட்சிகரமானதாக இருக்க வாய்ப்புள்ளது.

அதேபோல ஸ்மார்ட்வாட்களுக்கு நிகரான அம்சங்களை கொண்டிருப்பதால், அதற்கு சரியான மாற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அளவில் சிறிதாக இருப்பதால் பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் மட்டுமே பின்னடைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த சாம்சங் கேலக்ஸி ரிங்கிள் கொடுக்கப்படும் புதுப்புது டெக்னாலஜிகள் அதை பெரிதாக எடுத்துக்காட்டாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Ring Unveiled Galaxy Unpacked 2024 Event Specifiction Price Yet To Be Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X