ஒரேவொரு சொடக்கு போதும்.. டிவி, லைட், ஃபேன் எல்லாம் சொன்னபடி கேட்கும்.. ஆனால், இந்த ரிங் வேணும்!
ஒரேவொரு சொடக்கு போதும், டிவி சேனலை மாற்ற முடியும், ஃபேனை ஓட வைக்க முடியும், லைட்டை எரிய வைக்க முடியும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? இதையெல்லாம், இந்த ரிங் மட்டும் இருந்தாபோதும், அசால்ட்டா செய்யலாம். இதுகுறித்த விவரம் இதோ.
இன்றைய 21ஆம் நூற்றாண்டில் மக்களின் பொருளாதாரம் மாறவில்லை என்றாலும், அவர்களது வாழ்க்கைத் தரம் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால், ஒரு சகாப்தத்தில் கம்ப்யூட்டர்கள் செய்ததை, அடுத்த சகாப்தத்தில் ஸ்மார்ட்போன்கள் செய்கின்றன. இப்போது, ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஸ்மார்ட்வாட்ச்களில் வருகின்றன.

இப்படி மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் தொழில்நுட்பம் நுழைந்து அவை ஸ்மார்ட் டிவைஸ்களாக மாறிவருகின்றன. இப்போது, ஸ்மார்ட்வாட்ச்களின் காலம் கூட மெல்லமெல்ல மலையேறிவிடும் போலிருக்கிறது. ஏனென்றால், மக்களிடையே ஸ்மார்ட் ரிங் (Smart Ring) பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் ரிங்ஸ் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அந்த ஸ்மார்ட் ரிங்ஸ் என்னவெல்லாம் செய்யும் என்று தெரிந்தால், மக்களால் வாங்காமல் இருக்க முடியாது. அவ்வளவு, வியப்பான காரியங்களை ஸ்மார்ட் ரிங்ஸ்களால் செய்ய முடியும். இப்போது வரையில் மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் ரிங்ஸ்களில், ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஹார்ட் ரேட் மானிட்டர் ( Heart Rate Monitor), ஸ்டிரெஸ் லெவல் மானிட்டர் ( Stress Level Monitor), பிளட் ஆக்சிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதோடு ப்ளூடூத் ( Bluetooth) இருப்பதால் மொபைல் போனில் வரும் கால்களை ஒரு சொடக்கு போட்டால், அட்டெண்ட் செய்து கொள்ள முடியும். இதுவே வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால், சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring), மூலம் ஒரேவொரு சொடக்கு போட்டால், டிவி, ஃபேன், லைட்ஸ் போன்ற பல ஸ்மார்ட் டிவைஸ்களை உங்களால் கன்ட்ரோல் செய்ய முடியும்.
சாம்சங் (Samsung) நிறுவனம், 2015ஆம் ஆண்டிலேயே ஸ்மார்ட் ரிங் தயாரிப்பதற்கான பேட்டன்ட்டை வாங்கிவிட்டது. அதோடு தயாரிக்கும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், எந்த ஸ்மார்ட் ரிங்கையும் இதுவரையில் வெளியிடவில்லை. இந்த சூழலில், சாம்சங் ஹெல்த் பீட்டா ஆப்பில் (Samsung Health Beta App) ஸ்மார்ட் ரிங் சப்போர்ட் என்னும் ஆப்சன் கொடுக்கப்படுள்ளது. இதனால், சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட் ரிங்கை அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகின.
இப்போது, சீன ஊடகங்கள், சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் ரிங்கை, சாம்சங் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் வெளியிட இருப்பதாகவும், அந்த ரிங் இதற்கு முன்பு வெளியான எந்தவொரு ரிங்கையும் போலல்லாமல், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, லைட், ஃபேன், ஏசி போன்ற ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்கள் அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த ரிங்கின் விலையை பொறுத்தவரையில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கும் அனைத்து ஹெல்த் மானிட்டர்களையும் இது கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








