சாம்சங் கேலக்ஸி ஆன்8 : இந்தியாவில் அறிமுகமானது..!

Written By:

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த உடனேயே விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகம் செய்தது - சாம்சங் கேலக்ஸி ஆன்8. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வலைத்தளம் மூலம் சமூக தளங்களில் டீசர்களாக வெளியிடப்பட்டு, இப்போது பிரத்தியேகமாக ப்ளிப்கார்டில் கிடைக்கின்றது.

ரூ.15,900/- என்ற விற்பனை விலைக்கு அறிமுகமான இந்த கருவி தள்ளுபடி விலையில் அதாவது ரூ.14,900/-க்கு பிளாக், தங்கம், மற்றும் வெள்ளை என்ற மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்8 சிறப்பம்சங்கள் :

டிஸ்ப்ளே : 5.5 இன்ச் புல் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
பாடி : மெட்டல் பாடி, டைமண்ட் கேட் பிரேம்கள்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
ப்ராசஸர் : ஆக்டா-கோர் (1.6 ஜிகாஹெர்ட்ஸ்)
ரேம் : 3ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 16ஜிபி
மைக்ரோ எஸ்டி கார்ட் நீட்டிப்பு : 128ஜிபி வரையிலாக
பின்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ், எப்/1.9 அப்பர்ஷெர் கொண்ட13 எம்பி ஆட்டோபோகஸ் கேமிரா
முன்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ் கொண்ட 5எம்பி கேமிரா
பேட்டரி திறன் : 3300எம்ஏஎச்
சிம் : டவுல் மைக்ரோ சிம் ஆதரவு
அளவு மற்றும் எடை : 151.7x76x7.8எம்எம், 169 கிராம்
இணைப்பு வசதிகள் : 4ஜி, வோல்ட்.

நோக்கியா ப்ரிஸ்ம் : குதற்க்கமான நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்..?English summary
Samsung Galaxy On8 Launched in India, Exclusively on Flipkart. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot