அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஆன் மேக்ஸ்.!
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080x1920) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைஇதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு விலைகுறைக்கப்பட்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் 4ஜிபி ரேம் மற்றும் புதிய ஃபிளாக்ஷிப் கேமரா, அதன்பின் மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஆன் மேக்ஸ்.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080x1920) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைஇதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

13மெகா பிக்சல்:
சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, அதனுடன் பின்புற சென்சார் எப் / 1.7 துளை லென்ஸுடன் இணைந்திருக்கும். மேலும் முன்புற செல்பீ கேமரா 13 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்

4ஜிபி ரேம்;
கேலக்ஸி ஆன் மேக்ஸ் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 32ஜிபி வரை மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியா டெக் எம்டிகே பி25 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் பொருத்தவரை 3300 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.


விலைகுறைப்பு:
சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications