விமானங்களில் சாம்சங் கேலக்ஸி கருவிகளை பயன்படுத்தத் தடை!!

Written By:

உயர் ரக சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்று இன்டிகோ விமானத்தினுள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் விமானத்தினுள் இருந்த பயணிகளின் மத்தியில் பீதியை கிளப்பியது. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய இன்டிகோ விமானத்தில் 175 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 2 கருவியில் தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமானங்களிலும் சாம்சங் கருவிகளை பயன்படுத்த விமான போக்குவரத்து தலைமையகம் தடை விதித்துள்ளது. இது குறித்து அறிக்கை சாம்சங் நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த இன்டிகோ விமானத்தில் இச்சம்பவம் அரங்கேறியது. 6E-054 எனும் விமானத்தினுள் இருந்து புகை விமானம் முழுக்க பரவியதாக கூறப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

புகை வருவதைத் தொடர்ந்து பயணிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுத் தொடர்ந்து ஆய்வு செய்த போது சாம்சங் நோட் 2 கருவியில் இருந்து புகை வெளியாகியது கண்டுபிடிக்கப்பட்டு தீயணைக்கும் கருவிகளை கொண்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

ஆய்வு

குறிப்பிட்ட துறை அதிகாரிகள் புகையை வெளியிட்ட கேலக்ஸி கருவியினை ஆய்வு செய்வர் என்றும் இன்டிகோ சார்பில் இச்சம்பவம் விமான போக்குவரத்து தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை

தடை

பல்வேறு நாடுகளிலும் கேலக்ஸி நோட் 7 கருவி வெடித்ததால், கேலக்ஸி நோட் 7 கருவிகளை விமானங்களில் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விதிமுறை

விதிமுறை

இந்திய விமானத்தில் கேலக்ஸி கருவி வெடித்திருப்பது இதுவே முதல் முறை என்றாலும், இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து தலைமையகம் சார்பில் பல்வேறு புதிய விதிமுறைகளைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy Note Series Use Banned on Flights Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot