Home
News

யானைக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்தான் ரொம்ப பிடிக்குமாம்!

By Super
யானைக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்தான் ரொம்ப பிடிக்குமாம்!

ஸ்மார்ட்போனிற்குள் எத்தனை தான் நவீன தொழில் நுட்பம் இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போனின் அகன்ற திரை, பார்ப்பவர்களை அதிகம் வியக்க வைக்கிறது என்பது உண்மை தான். இந்த உண்மையை நிரூபித்து விட்டது சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் திரை வசதியையும் சூப்பர் அமோல்டு தொடுதிரையை கொண்டது. இதில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கவசமும் உள்ளது. இதனால் கீறள்கள் ஏற்படுமோ என்ற பயமும் இல்லை. இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது. அற்புதமான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.

ஆன்ட்ராய்டு ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு சப்போர்ட்டாக டியூவல் கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸர் பெரிதும் துணை புரியும். ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 2,500 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்த நீடித்து உழைக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியான இந்த ஸ்மார்ட்போனை ஒரு யானை ஒன்று இயக்கி பார்ப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இப்போது இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தையிலும் ரூ.34,990 விலையில் பெறலாம்.

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் யானை கூட இயக்கும் அளவு பெரிய திரை கொண்டதா? என்று அனைவரையும் இந்த வீடியோ பிரம்மிக்க வைக்கிறது. இந்த வீடியோ பார்வையாளர்களுக்காக இங்கேயும் கொடுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் உங்களையும் வியக்க வைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X