சாம்சங் கேலக்ஸி நோட் 9 விலை மற்றும் விவரக்குறிப்பு லீக் ஆகியுள்ளது.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 வீடியோ சென்ற வாரம் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகியது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இப்பொழுது கேலக்ஸி நோட் 9 பற்றிய அடுத்த செய்தி வளைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 வீடியோ சென்ற வாரம் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகியது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இப்பொழுது கேலக்ஸி நோட் 9 பற்றிய அடுத்த செய்தி வளைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த லீக் இல் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ரஷ்யா வில் ஸ்மார்ட்போன் பெட்டியின் புகைப்படம் ஒன்று வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களின் குறிப்புக்கள் தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9, சிறந்த 6.4 இன்ச் கியூஎச்டி சூப்பர் அமோலெட் திரையுடன் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது முந்தைய கேலக்ஸி எஸ் 9 பிளஸ் மாடலை விட பெரியதாக இருக்க போகிறதுதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிப்செட் மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடல் போன்றே இருக்கிறது.
இத்துடன் புதிய 512 ஜிபி வெறியன்ட் அறிமுகமாகிறது, இருப்பினும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை நமக்குத் தகவலும் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 விவரக்குறிப்புகள்:
- 6.4 இன்ச் கியூஎச்டி+ திரை 2960x1440 பிக்சல் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் அட்ரினோ 630 ஜிபியூ
- ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் மாலி G72MP18 ஜிபியூ
- 6ஜிபி ரேம்
- 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
- விரிவாக்க ஸ்டோரேஜ் நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- சிங்கிள் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோஷன்
- 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர்
- 8 எம்பி ஆட்டோ போக்கஸ் செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்(IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எகேஜி, டால்பி அட்மோஸ் டியூன் செய்யப்பட்டுள்ளன
- பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் சென்சார்
- 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், என்ஜினீர்டு புளு மற்றும் ஆர்டிசன் காப்பர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இதன் 128 ஜிபி மாடலின் இந்திய மதிப்பில் ரூ.75,705 ஆகவும் 512 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ.97,340 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications