சோதனை மேல் சோதனை : சாம்சங் வேதனை.!

By Meganathan
|

சாம்சங் நிறுவனம் சோதனை மேல் சோதனைகளை சந்தித்து வருகின்றது. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிக்குப் போட்டியாக சாம்சங் சார்பில் வெளியிடப்பட்ட கேலக்ஸி நோட் 7 கருவி தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெடித்துச் சிதறியது. பெரும்பாலான கருவிகள் வெடித்ததைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது புத்தம் புதிய கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற்றது.

கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சாம்சங் நோட் 7 கருவி குறித்த மீம்ஸ் அதிகளவு பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் பழைய கருவிகளுக்கு மாற்றாக புதிய நோட் 7 கருவிகளை விநியோகம் செய்யும் பணிகளை சாம்சங் துவங்கியது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலையில் சாம்சங் கதை மாறியிருக்கின்றது. அந்நிறுவனம் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட புதிய கேலக்ஸி நோட் 7 கருவியும் வெடித்திருப்பதாகப் பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனா

சீனா

சீனாவைச் சேர்ந்த சாம்சங் கேலக்ஸி நோட் 7 பயனர் ஒருவர் தனது புதிய கருவி சார்ஜ் செய்யும் போது வெடித்துச் சிதறியதாக தெரிவித்துள்ளார். இதனால் புதிய பேட்டரியின் தரம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திரும்பப் பெற்றது

திரும்பப் பெற்றது

சமீபதச்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற்றது. இந்தக் கருவிகள் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இதர சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம்

காரணம்

இந்தக் கருவிகளும் சார்ஜிங் செய்யும் போது வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் பேட்டரிகளை பயன்படுத்தி வருகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிறுவனம்

நிறுவனம்

சாம்சங் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பேட்டரிகளை வாங்குகின்றது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இருந்தும் இவை சீன நிறுவனம் ஒன்றின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டவை எனக் கூறப்படுகின்றது.

வெளிப்புற வெப்பம்

வெளிப்புற வெப்பம்

முன்னதாக சீனாவில் வெடித்துச் சிதறிய சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் குறித்து ஆய்வு செய்த சாம்சங் இந்தக் கருவிகள் வெளிப்புற வெப்பம் காரணமாக வெடித்துச் சிதறியதாக தெரிவித்தது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேக்புக்

மேக்புக்

சில தினங்களுக்கு முன் சீனாவைச் சேர்ந்த ஹூய் என்பவர் தனது கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த மேக்புக் கருவியை சேதப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் கருவி யுஎஸ்பி மூலம் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்தது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பணம்

பணம்

சாம்சங் நிறுவனம் சார்பில் ஹூய் கருவி வெடித்துச் சிதறியதற்கான பணத்தைத் திரும்ப வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேதமடைந்த லாப்டாப் கருவியும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு

ஆய்வு

மேலும் ஹூய் கருவி வெடித்ததற்கான காரணம் குறித்த ஆய்வு ஹூய் தனது கருவியை சாம்சங் நிறுவனத்திடம் வழங்கியதும் மேற்கொள்ளப்படும் என சாம்சங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

துவக்கம்

துவக்கம்

ஆப்பிள் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க கேலக்ஸி நோட் 7 கருவியை வைத்து சாம்சங் நிறுவனம் இந்தாண்டு விற்பனையை அதிகரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பு

மதிப்பு

வெடித்துச் சிதறிய சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் மற்றும் அந்நிறுவனம் சார்பில் திரும்பப் பெறப்பட்ட கருவிகளின் மொத்த மதிப்பு $3 பில்லியன் இந்திய மதிப்பில் ரூ.19,939 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 User Says New, 'Safe' Unit Exploded Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X