சாம்சங் கேலக்ஸி நோட் 7 : வீழ்ந்த காரணம் இது தான்!

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி நோட் 7 - வெளியீடு மற்றும் திரும்பப் பெறப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் கருவிகளுக்கு போட்டியாகக் களம் இறங்கிய கருவிகள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து சில நாட்கள் இண்டர்நெட் வைரலானது.

கருவிகள் திரும்பப் பெறும் வழக்கம் புதியது இல்லை, முன்னதாக 2007 ஆம் ஆண்டில் நோக்கியா நிறுவனம் தனது பேட்டரிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெற்றது. சுமார் 46 மில்லியன் பேட்டரிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 வாங்கிய பயனர்களிடம் கருவிகளை பேக்கப் செய்து ஸ்விட்ச் ஆஃப் செய்து திரும்ப வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இங்கு சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களைத் தான் வழங்கியுள்ளோம்..

கேலக்ஸி நோட் 7 ஏன் வெடித்தது?

கேலக்ஸி நோட் 7 ஏன் வெடித்தது?

கேலக்ஸி நோட் 7 கருவி வெடிக்க அதன் பேட்டரி செல் பிரச்சனை தான் முக்கிய காரணம் என சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பேட்டரிகளை தயாரிக்கும் போது ஏற்பட்ட சிறு கோளாறு தான் அதனினை வெடிக்கச் செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எத்தனை கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்தன?

எத்தனை கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்தன?

செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சாம்சங் சார்பில் சுமார் 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 கருவிகள் திரும்பப் பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, செப்டம்பர் 27 ஆம் தேதி வாக்கில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 60% கேலக்ஸி நோட் 7 கருவிகளுக்கான மாற்றுக் கருவிகள் வழங்கப்பட்டன.

அதிக சூடு

அதிக சூடு

முதல் முறை கருவிகள் திரும்பப் பெறப்பட்ட போது சுமார் 35 கருவிகள் வெடித்ததால் அதன் பயனர்கள் முறையிட்டதாக சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல்

தகவல்

அனைத்து நோட் 7 கருவிகளையும் திரும்பப் பெற தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சாம்சங் சார்பில் மின்னஞ்சல் அனுப்புதஸ், நோட்டிபிகேஷன் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ள பயனர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.

அப்டேட்

அப்டேட்

கருவிகளைத் திரும்பப்பெறும் வரை கருவ முழுமையாக சார்ஜ் ஆவதைத் தடுக்கும் புதிய வகை மென்பொருள் அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுழள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திரும்பப்பெறப்பட்ட கருவிகளுக்கு என்னவாகும்?

திரும்பப்பெறப்பட்ட கருவிகளுக்கு என்னவாகும்?

சாம்சங் திரும்பப்பெறும் கேலக்ஸி நோட் 7 கருவிகள் என்னவாகும் என்ற கேள்விக்கு சாம்சங் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. சாம்சங் நோட் 7 கருவிகளில் இருக்கும் பாகங்களை மற்ற கருவிகளுக்கு பயன்படுத்துமா அல்லது இவற்றை முழுமையாக அழித்து விடுமா என்பது கேள்விக் குறியானதாகவே இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 Unanswered Questions

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X