Home
News

கேலக்ஸி நோட் 7 வெடிப்பு : அதிகாரப்பூர்வ காரணத்தை அறிவித்த சாம்சங்.!

சாம்சங் பிராண்ட் பெயரையே கெட்டுப்போக வைத்த கேலக்ஸி நோட் 7 கருவிகளின் பேட்டரி வெடிப்புகளுக்கு காரணம் என்ன மற்றும் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்றும் சாம்சங் நம்பிக்கை அளித்துள்ளது.

By Muthuraj

சாம்சங் நிறுவனம் என்றாலே வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனம் என்று சொல்லி கிண்டல் செய்யுமளவிற்கு நிறுவனத்தின் பிராண்ட் பெயரை கேலக்ஸி நோட் 7 கருவிகளின் பேட்டரி வெடிப்பு மற்றும் பேட்டரி தீப்பிடிப்பு நிகழ்வுகள் பாழாக்கின என்பதை நாம் அறிவோம்.

இந்த வெடிப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சாம்சங் அவைகள் அனைத்தையும் காதில் வாங்கிகொள்ளாத ஒரு நிலைப்பாட்டை காட்டியது. இப்போது சாம்சங் பிராண்ட் பெயரையே கெட்டுப்போக வைத்த கேலக்ஸி நோட் 7 கருவிகளின் பேட்டரி வெடிப்புகளுக்கு காரணம் என்ன மற்றும் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்றும் சாம்சங் நம்பிக்கை அளித்துள்ளது.

தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு காரணம்

தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு காரணம்

சாம்சங் தொழில்நுட்ப வரலாற்றில் மிக பெரிய தொழில்நுட்ப தோல்வியான இதற்கு காரணம் தவறான பேட்டரிகள் தான் நோட் 7 கருவிகளின் தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்றும் இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையை மீட்கவும், ஸ்மார்ட்போன் வணிக வேகத்தை மீண்டும் அதிகரிக்கவும் சாம்சங் முயற்சிக்கும் என்று சாம்சங் கூறியுள்ளது.

நிலைத்தன்மை

நிலைத்தன்மை

உலகின் முதன்மை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சாம்சங் நிறுவனத்தின் முதல் விளக்கமாக இதில் இனி அதன் பிரீமியம் சாதனத்தின் பயன்படுத்திய வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகள் நிராகரிகப்பட்டு வரவிருக்கும் எஸ்8 அக்கருவிகளில் தீ விபத்துக்கள் ஏதுமில்லாத நிலைத்தன்மை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கிடைத்த பாடங்கள்

கிடைத்த பாடங்கள்

"இப்போது நாங்கள் பாதுகாப்பான மற்றும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட வரும்நாட்களை எதிர்நோக்குகிறோம். கடந்த பல மாதங்களாக கிடைத்த பாடங்கள் மூலம் இப்போது ஆழ்ந்த செயல்முறைகள் மற்றும் கலாச்சாரம் பிரதிபலிப்பய் நாங்கள் நிகழ்த்துகிறோம்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்8 கருவி

எஸ்8 கருவி

நோட் 7 கருவியின் தோல்வியானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் எஸ்8 கருவியை எந்த விதத்திலும் பாதிக்காது உடன் நுகர்வோர்கள் எஸ்8 கருவியை வாங்க எந்த வித தயக்கத்தையும் காட்டமாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது.

பங்கு விலை

பங்கு விலை

நோட் 7 கருவியின் தோல்வி பாதிப்புகளை ஏற்படுத்திய போதிலும் தென் கொரிய நிறுவனமான சாம்சங், நான்காம் காலாண்டில் மூன்று மடங்கு அதிக லாபத்தினை பூமிங் சிப் விற்பனை மூலம் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பு இந்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் பங்கு விலையை அதிகரிக்கும் என்பதை மறைமுகமாக சொல்வதாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் இந்தியாவில் வாங்கக்கூடிய 10 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 Fires Cause Officially Announced. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X