சாம்சங் கேலக்ஸி நோட் 7 : இந்த அம்சங்கள் போதுமா.??

By Meganathan
|

சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியை விரைவில் வெளியிட இருக்கின்றது. ஏற்கனவே இந்த கருவியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், ரகசியமாக இணையத்தில் கசிந்த அம்சங்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருவியானது ஆகஸ்டு 2 ஆம் தேதி வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

தற்சமயம் கிடைத்த தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் ஸ்லைடர்களில்..

01

01

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியில் 3600 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம். முன்னதாக கேலக்ஸி நோட் 5 கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

02

02

புதிய தகவல்களில் கேலக்ஸி நோட் 7 கருவி 5.7 இன்ச் AMOLED திரை QHD 2K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

03

03

குவால்காம் ஸ்னாப்டிராகன் அல்லது எக்சைனோஸ் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

04

04

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கலாம்.

05

05

கேலக்ஸி நோட் 7 கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்படலாம்.

06

06

கேலக்ஸி நோட் 7 கருவியில் IP68 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படலாம், இதன் மூலம் கருவி 3.2 அடி ஆழத்தில் 30 நிமிடம் வரை நீரில் இருந்தாலும் எதுவும் ஆகாது.

07

07

கேலக்ஸி நோட் 7 கருவியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 to feature 3600mAh battery Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X