சாம்சங் கேலக்ஸி நோட் 5 - ஆகஸ்டு வெளியீடு..!

Written By:

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போன் கருவியை விரைவில் வெளியிட இருப்பதாக இவ்விவகாரத்தில் தொடர்புடையவர் தெரிவித்திருக்கிறார். உலகின் தலைசிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சாம்சங் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் கேலக்ஸி நோட் 5 பேப்ளட் கருவியை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட் 3 மற்றும் நோட் 4 கருவிகள் முறையே செப்டம்பர் மாதம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 5 - ஆகஸ்டு வெளியீடு..!

இது குறித்து முறையான தகவல்களை வழங்க சாம்சங் நிறுவனம் மறுத்து விட்ட நிலையில், சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல் ஸ்மார்ட்போன், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளுக்கு முன்பாகவே சந்தையில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க ஸ்மார்ட்போன் நிருவனமான ஆப்பிள் இம்முறை அதிகளவிலான கருவிகளை தயாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் இதழில் குறிப்பிட்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

எது எப்படியோ, சாம்சங் நிறுவனத்தின் புதிய கருவியின் வெளியீடு குறித்து பல செய்திகள் வெளியானாலும் அந்நிறுவனத்தின் மவுனம், சாம்சங் ப்ரியர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம் சாம்சங் பேன்ஸ்..!

 

Read more about:
English summary
Samsung Electronics Co is bringing forward the launch of the Galaxy S5 smartphone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot