இந்தியாவில் நாளை அறிமுகம்: சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்- எப்படி பார்ப்பது தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5 ஜி ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது என சாம்சங் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

கேலக்ஸி பவர்ஃபெஸ்ட் நிகழ்வு
சாம்சங் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5 ஜி ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் "கேலக்ஸி பவர்ஃபெஸ்ட்" என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது.

நாளை மதியம் 12 மணிக்கு
சாம்சங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது முதன்மை ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. கேலக்ஸி பவர்ஃபெஸ்ட் நிகழ்வு நாளை மதியம் 12 மணிக்கு சாம்சங் இந்தியா யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அமேசானில் குறிப்பிட்டுள்ள பட்டியலின்படி இந்த இரண்டு தொலைபேசிகளும் ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ்
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்பு வசதியைக் கொண்டும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. குறிப்பாக எஸ்பெண் ஆதரவும் இதில் உள்ளது.

பின்புறம் 108எம்பி கேமரா
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இதில் அடக்கம்.

128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20
6.7 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், ஹெச்டிஆர் 10+ ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர்
ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. 12 எம்பி ரியர் கேமரா 64 எம்பி ரியர் கேமரா, மற்றும் 12 எம்பி கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது. இதில் 10 எம்பி செல்பி கேமரா அம்சமும் இடம்பெற்றுள்ளது. அதோடு 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications