அவசரப்பட்டு வேறெந்த போனும் வாங்கிடாதீங்க.. புது Samsung போன் வருது.. கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்குங்க..
சாம்சங் (Samsung) நிறுவனம் விரைவில் பட்ஜெட் செக்மென்ட்டில் புதிதாக சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்பாக இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்கள் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) ஸ்மார்ட்போன் சாதனம் ஆனது என்ன அம்சங்களுடன் வெளிவரும் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் லீக் ஆன தகவலின் படி, வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி M55 5ஜி சாதனம் 6.7" இன்ச் கோண FHD+ சூப்பர் அமோலேட் பிளஸ் (Super AMOLED+) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G):
இந்த பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1,000 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது சுமார் 180 கிராம் எடை குறைவானது மற்றும் வெளிர் பச்சை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த டிஸ்பிளே புக்கிட் செக்மென்ட்டில் சிறந்த குவாலிட்டியை வழங்குகிறது.
கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது பின்புறத்தில் மூன்று கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது OIS ஆதரவுடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ், உடன் LED ஃபிளாஷ் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் பெறுகிறது. முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் 50MP அல்லது 32MP செல்ஃபி கேமராவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ், இது குவால்காம் (Qualcomm) இன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் இல் இயங்குகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய மாடல் எக்சினோஸ் 1380 (Exynos 1380) சிப்செட் உடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

1TB ஸ்டோரேஜ் வரை:
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8 ஜிபி முதல் 12 ஜிபி ரேம் வரை, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் சாம்சங் நாக்ஸ் வால்ட் ஆகியவை அடங்கும்.
கூடுதல் அம்சங்களில் டால்பி அட்மோஸ், வைஃபை 6, டூயல் சிம் இணைப்பு, புளூடூத் 5.2 மற்றும் என்எப்சி ஆதரவு ஆகியவை அடங்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஒன் யுஐ 6 உடன் தொடங்கப்படும். இது ஐந்து முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை உறுதியளிக்கிறது. இந்த அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி M55 5ஜி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) சாதனம் 5000mAh பேட்டரி உடன் 45W வயர்டு சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று மற்றொரு லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த சாதனம் இந்திய சந்தையில் ரூ.25,000 - ரூ.30,000 விலை புள்ளியில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








