Home
News

Samsung கில்லாடி.. பட்ஜெட்ல 108MP ட்ரிபிள் கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5G விரும்பிகளை கவரும் புது மாடல்..

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் 108MP கேமரா அனுபவத்தை வழங்கப்போகிறது. ஆம், மக்களே விரைவில் இந்த அம்சத்துடன் வெளிவரப்போகும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் சாம்சங் பட்டியலில் காணப்பட்டுள்ளது. அது என்ன மாடல்? எப்போது அறிமுகம்? இதோ விபரம்.

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை பல்வேறு விலை செக்மென்ட்டில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் மிக விரைவில் ஒரு புதிய சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை மிட்-பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் இல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Samsung கில்லாடி.. பட்ஜெட்ல 108MP ட்ரிபிள் கேமரா.. AMOLED டிஸ்பிளே..

சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G): என்ற பெயருடன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் மற்ற சந்தைகளில் சாம்சங் கேலக்ஸி C சீரிஸ் சாதனமாக அறிமுகமாக வாய்ப்புள்ளது என்றும் லீக் தகவல் குறிப்பிடுகிறது.

சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, கூகிள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் SM-C5560 என்ற மாடல் எண்ணுடன் ஒரு பெயர் குறிப்பிடப்படாத சாம்சங் கேலக்ஸி C சீரிஸ் மாடல் சாதனம் காணப்பட்டுள்ளது. இது சீன சந்தைக்கு உட்பட்டதாக இருக்குமென்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த சாதனம் 108MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

சீனாவில் C சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் சாதனங்கள் இந்தியாவில் M சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வரலாற்றை கொண்டிருப்பதனால், இந்த புதிய சாதனம் அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) ஆக தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Samsung கில்லாடி.. பட்ஜெட்ல 108MP ட்ரிபிள் கேமரா.. AMOLED டிஸ்பிளே..

AMOLED டிஸ்பிளேவுடன் 108MP கேமரா:

மற்றொரு லீக் தகவலில் இந்த மாடல் எண்ணுடன் காணப்பட்ட சாதனம் குவால்காம் வழங்கும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதை காண்பித்துள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் பட்ஜெட் செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கானது என்பதனால், இது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் இந்த சாதனம் 8ஜிபி ரேம் உடன் AMOLED டிஸ்பிளேவை மார்க் செய்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) லீக் தகவலில், இந்த சாதனம் 3 பின்புற கேமராவுடன் பொலிகார்போனேட் பின்பக்க பேனல் உடன் காணப்பட்ட ப்ளூ மற்றும் பிளாக் நிற லீக் போட்டோக்களை காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தில் பன்ச் ஹோல் செல்பி கேமரா கட் அவுட் உடன் இந்த சாதனம் காணப்பட்டது.

இப்போது, இந்த சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G) சாதனம் 5000mAh பேட்டரி உடன் 45W வயர்டு சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று மற்றொரு லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த சாதனம் இந்திய சந்தையில் ரூ.25,000 - ரூ.30,000 விலை புள்ளியில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55 5G spotted on Google Play Console With 108MP Triple Camera AMOLED display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X