120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12, 108 எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி: ஏப்ரல் 22 உறுதி!
சாம்சங் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும்
சாம்சங் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது அமேசான் மூலம் டீஸ் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த வருடத்தில் வெளியான கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இந்தியாவில் வெளியடப்படும் தேதி ஏப்ரல் 22 ஆம் தேதி என நிறுவனம் டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய 5ஜி சாம்சங் சாதனம் இந்த மாத தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது. இந்த சாதனம் 108 எம்பி முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான கேலக்ஸி எம்52 5ஜி சாதனத்தின் வாரிசாக இந்த சாதனம் இருக்கிறது.

அமேசான் மூலம் அறிமுகம் உறுதி
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி வெளியீடு அமேசான் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சாம்சங் இந்தியாவில் இணையதளம் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலும் கிடைக்கும், ஏப்ரல் 22 அன்று மதியம் 12 மணிக்கு வெளியடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இந்திய விலை
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி சாதனத்தின் விலையுடன் ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இந்த மாடல் அறிமுகமானது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.31,999 ஆக இருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் கேலக்ஸி எம்53 5ஜி ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வரும் என்பதை உறுதிப்படுத்தியது. கூடுதல் வேரியண்ட்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி சிறப்பம்சங்கள்
சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 உடனான யூஐ 4.1 உடன் இருக்க வாய்ப்புள்ளது. சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வரும் என கூறப்படுகிறது. சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது இன்ஃபினிட்டி ஓ சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளேவையும் 120 ஹெர்ட்ஸ் உச்ச புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும்.

108 எம்பி முதன்மை கேமரா
சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என கூறப்படுகிறது. சாம்சங் கேல்கஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications