64எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின்
சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றிய விரிவாகப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலா மெமரி நீட்டிப்பு ஆதரு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனின் 64எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி போர்ட்ரெயிட் கேமரா +5எம்பி மேக்ரோ
கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என எதரிபார்க்கப்படுகிறது. மேலும்
25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இவற்றுள்
அடக்கம்.

மேலும் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications