சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் முழுவிபரங்கள் வெளியானது.!
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்40ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறவனம் சார்பில் தெரவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முழுவிவரங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே
கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9
பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், ஏஐ
எனப்படும் செயற்கை நுண்றிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி -விலை:
சாம்சங் கேலக்ஸி எம்40 சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளதுஇ பின்பு 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும். குறிப்பாக இந்த ஸமார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications