வாங்குனா இந்த Samsung போனை தான் வாங்கணும்! கம்மி காசில் அல்டிமேட் ஸ்பெக்ஸ்!
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் அதன் புதிய மிட் ரேஞ் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M34 5G சாதனத்தை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Samsung Galaxy M34 5G சாதனம் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். சாம்சங் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை டீஸ் செய்துள்ளது. Samsung Galaxy M34 5G இன் வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஒரு புதிய கசிவு இப்போது மீதமுள்ள விவரக்குறிப்புகள் மற்றும் அதன் விலையை வெளிப்படுத்தியுள்ளது.

பிரபலமான டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Tipster Yogesh Brar) வெளியிட்ட தகவலின் படி, Samsun Galaxy M34 5G இன் அடிப்படை மாடல் ரூ.20,000-க்குள் இருக்கும் என்று கூறியுள்ளார். அதேசமயம் மற்றொரு புகழ்பெற்ற டிப்ஸ்டரான இஷான் அகர்வால், அடிப்படை மாடலை விட, ஹை-வேரியண்ட் மாடலின் விலை அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Samsung Galaxy M34 5G விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் இதுவரை அறியப்பட்ட பிற விவரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். Samsung Galaxy M34 5G ஆனது நிறுவனத்தின் இடைப்பட்ட 5G ஸ்மார்ட்போனாக இருக்கும். இது ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த Samsung Galaxy M34 5G இந்தியாவில் ரூ.18,000 அல்லது ரூ.19,000 விலையில் அறிமுகம் செய்யப்படும்.
இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.24,000 விலை புள்ளிக்குள் வெளிவரும் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. Samsung Galaxy M34 5G இன் முக்கிய விவரக்குறிப்புகளை பற்றி பேசுகையில், இடஙக சாதனம் 6.5' இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் சிறிய வாட்டர் டிராப் நாட்சைக் கொண்டிருக்கும்.
இது Exynos 1280 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்குகிறது. பின்புறத்தில்,ட்ரிபிள் கேமரா அமைப்புடன் LED ஃபிளாஷ் உடன் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது.
இந்த சாதனம் முன்பக்கத்தில் 13MP கேமராவை கொண்டிருக்கும். இந்த சாதனம் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இறுதியாக, Samsung Galaxy M34 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 உடன் UI 5.1 OS இல் இயங்கும். ஜூலை ஜூலை 7ம் தேதி இது பட்ஜெட் விலையில், ரூ.20,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








