அடுத்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்- அறிமுகத்துக்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி அம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சாதனம் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவோடு 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது உலகளாவிய சந்தைகளில் ப்ளூ, பழுப்பு மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் சாதனமானது மிட்ரேஞ்ச் வகையில் இருக்கும் என அமேசானில் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் இது இருக்கும் என இந்த தளத்தில் காட்டப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சாதனமானது உலகளாவிய சந்தைகளில் வெளியிட்டது போன்றே அதே அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி
வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் 8 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் எக்ஸினோஸ் 1280 எஸ்ஓசி ஆதரவோடு வரும் என தகவல்கள் கூறுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.20,000-க்கு குறைவான விலையில் இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.
டிப்ஸ்டரில் வெளியான விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார். ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி ஏ13, சாம்சங் கேலக்ஸி ஏ23 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி உடன் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி உடன் பொருந்தும் விதமாக இருக்கிறது. டிப்ஸ்டர் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனானது அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்திய சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி மாடலின் வெளியீட்டு விவரங்கள் மற்றும் மாடலின் வெளியீட்டு விவரங்கள் அல்லது விவரக்குறிப்புகளை சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போன் குறித்து அமேசானின் மைக்ரோசைட்டில் டீஸ் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த டிப்ஸ்டர் தகவல்களை பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய மாடல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 இல் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் எனவும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஆனது 8 ஜிபி ரேம் ஆதரவோடு வரும் எனவும் இது ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 1280 எஸ்ஓசி வசதியைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

50 எம்பி முதன்மை கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது இந்த மாத தொடக்கத்தில் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலைப் போன்றே இதுவும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் இரட்டை 2 எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் கேமராக்கள் உடனான குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications