Home
News

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி அறிமுகம்: 50எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி- விலை இவ்வளவுதான்!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமராக்கள், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே அமைப்பு, 6000 எம்ஏஎச் பேட்டரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் புது ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் புது ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது கேலக்ஸி எம் சீரிஸ் மாடலின் சமீபத்திய மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5என்எம் ஆக்டோ கோர் எக்ஸினோஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி என அதிகபட்ச சேமிப்பு வசதியுடன் வருகிறது.

25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி

25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ஒரு குவாட் ரியர் கேமரா யூனிட் உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் ஆப்ஜெக்ட் ரிமூவ் அம்சம் மற்றும் பொக்கே பயன்முறை உள்ளிட்ட கேமரா அம்சத்தோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது வாய்ஸ் கவனம் அம்சத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அழைப்புகளை பெறும் போது பின்னணி இரைச்சல் நீக்கம் செய்யும் அம்சத்தோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என வருகிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அறிமுக விலையாக ரூ.17,999 என கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.20,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அறிமுக விலையாக ரூ.19,999 என கிடைக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகை எத்தனை நாட்கள் வழங்கப்படும் என தெரியவில்லை.

பல்வேறு சலுகைகளுடன் ஸ்மார்ட்போனை வாங்கலாம்

பல்வேறு சலுகைகளுடன் ஸ்மார்ட்போனை வாங்கலாம்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது பச்சை மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 8 முதல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலமாக வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகையோடு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இரட்டை சிம் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 உடனான ஒரு யூஐ 4.1 உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி வி-டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் பெயரிடப்படாத ஆக்டோ கோர் 5என்எம் எக்ஸினோஸ் செயலி ஆதரோவடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்கள் உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ரேம் விரிவாக்க ஆதரவோடு வருகிறது, இதை பயன்படுத்தி 16 ஜிபி ரேம் வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது, இந்த சாதனத்தில் 50 எம்பி முதன்மை கேமரா ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா பொக்கோ எஃபெக்ட், சிங்கிள் டேக், ஆப்ஜெக்ட் ரிமூவ் அம்சம் மற்றும் வீடியோ டிஎன்ஆர் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி வசதிக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆதரவோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M33 5G Smartphone Launched in India With 50MP Camera, 6000 mAh Battery and More: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X