Home
News

விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் படஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 1200 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார

அதேபோல் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர்,6ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22

விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே வசதிக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 4என்எம் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கருப்பு, வெள்ளை, தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா ( f/1.8 aperture) + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 168 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M33 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X