Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் Samsung Galaxy M52 ஸ்மார்ட்போன் மீது ஒரு நம்ப முடியாத சலுகையை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் இந்தியாவில், புதிய சாம்சங் கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனின் விலை ரூ 9,000 வரை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே மகிழ்ச்சியான செய்தியாகப் பார்க்கப்பட சாம்சங் ரசிகர்களுக்கு இப்போது, மற்றொரு புதிய சலுகையும் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்போகிறது.

Samsung Galaxy M32 மீது அதிரடி விலை குறைப்பு
சாம்சங் நிறுவனத்தால், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy M32 ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலையை நிறுவனம் தற்போது அதிரடியாகக் குறைத்துள்ளது. ஆம், சாம்சங்கிடம் இருந்து அடுத்த விலை குறைப்பை பெரும் ஸ்மார்ட்போன் மாடலாக Samsung Galaxy M32 மாறியுள்ளது. இந்த அதிரடி விலைக் குறைப்பு சாம்சங் Galaxy M52 டிவைஸிற்கு வழங்கப்பட்டது போலப் பெரியளவில் இல்லாவிட்டாலும்,

Samsung Galaxy M32 போன் மீது எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது?
இது Samsung Galaxy M32 ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் இந்த டிவைஸின் விலை முன்பை விட இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. Samsung Galaxy M32 ஸ்மார்ட்போன் மீது இப்போது ரூ.2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, Samsung Galaxy M32 சாதனத்தின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 12,999 விலைக்குக் கிடைக்கிறது.

Samsung Galaxy M32 ஸ்மார்ட்போனின் புதிய விலை என்ன?
அதேபோல், Samsung Galaxy M32 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இப்போது ரூ 14,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இரண்டு Samsung Galaxy M32 ஸ்மார்ட்போன் வேரியண்ட்களும் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 என்ற விலையில் வாங்கக் கிடைத்தது என்பது குறிபிடித்தக்கது. இந்த புதிய விலையானது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரில் பிரதிபலிக்கிறது.

Samsung Galaxy M32 வாங்க இது தான் சிறந்த நேரமா?
இந்த டிவைஸை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy M32 லைட் ப்ளூ மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வாங்கக் கிடைக்கிறது. இது நிரந்தர விலை வீழ்ச்சியா அல்லது தற்காலிகமானதா என்பது இன்னும் உறுதிப்படத் தெரியவில்லை. பெரும்பாலும், இந்த அதிரடி விலை குறைப்பு நிரந்தரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், விலை குறைந்துள்ள இந்நேரத்தில் இந்த போனை வாங்குவது சிறந்தது.

Samsung Galaxy M32 சிறப்பம்சம்
Samsung Galaxy M32 ஆனது 6.4' இன்ச் FHD+ Super AMOLED இன்பினிட்டி-U டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் மற்றும் 800 nits உயர் பிரைட்னஸ் மோட் உடன் வருகிறது. இந்த சாம்சங் சாதனமானது MediaTek இன் Helio G80 சிப்செட் மூலம் 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது microSD கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது.

Samsung Galaxy M32 கேமரா அம்சம்
கேமராவை பொறுத்தவரை, Samsung Galaxy M32 ஆனது 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி Samsung ISOCELL GW3 சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார்களாக இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 20 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy M32 போனின் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
Samsung Galaxy M32 ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 130 மணிநேர மியூசிக் பிளேபேக், 40 மணிநேர டாக் டைம் நேரம் மற்றும் 25 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 32 ஆண்ட்ராய்டு 11 இல் ONEUI உடன் இயங்குகிறது.

Samsung Galaxy M32 வாங்குவது நல்ல சாய்ஸா?
சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்டுக்காக இயர்போன்களைப் பயன்படுத்தும் போது கேலக்ஸி எம்32 டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகிறது. இத்துடன், டூயல் சிம், 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை இதில் உள்ளது. குறைந்த விலையில் குவாட் கேமரா அமைப்புடன் ஒரு அருமையான டிவைஸை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த Samsung Galaxy M32 ஒரு பெஸ்ட் சாய்ஸ்.


Click it and Unblock the Notifications