Home
News

இந்தியா: சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 7-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு?

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பாரப்புகளை உருவாக்கியுள்ளது என்பது
குறிப்பிடத்க்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் iகெinவைல-ஏ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30 launched in India, price starts Rs 14990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X