Home
News

அடிச்சான் பாரு அமேசான்.. 32 சதவீத ஆஃபரில் Samsung 5G ஸ்மார்ட்போன்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடந்துவரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 (Great Indian Festival 2026) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

இப்போது, அமேசான் விற்பனையில் 32 சதவீத தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ரூ.18,999 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.568 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.

அடிச்சான் பாரு அமேசான்.. 32 சதவீத ஆஃபரில் Samsung 5G ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் சப்போர்ட் கிடைக்கிறது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஒன் யுஐ 7.0 சாப்ட்வேர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போனில் 6.7 இன்ச் அளவிலான ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் சப்போர்ட் உள்ளது. மேலும், இதில் 1100 நிட்ஸ் எச்பிஎம் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

அதேபோல், இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்க்ரோலிங், வீடியோ பார்ப்பது மற்றும் கேமிங் போன்றவற்றில் ஸ்மூத்தான அனுபவத்தைப் பெற முடியும். அமோலெட் டிஸ்பிளே என்பதால் நிறங்களும் சிறப்பாக இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. இதனுடன் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெயின் கேமராவில் OIS சப்போர்ட் இருப்பதால், கைகளில் போனை வைத்துப் படம் எடுக்கும்போது ஏற்படும் சிறிய அசைவுகளை குறைத்து தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும். மேலும், ஆட்டோ போகஸ் வசதியும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 13 எம்பி கேமரா உள்ளது.

பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 5என்எம் எக்ஸினோஸ் 1330 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் அன்றாட பயன்பாடுகள், மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றை சிறப்பாக கையாள முடியும்.

பேட்டரியைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போனை விரைவாக அன்லாக் செய்ய முடியும். அதேபோல், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸுக்காக IP54 ரேட்டிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்படவில்லை.

ஆகவே, சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போனை மூன்லைட் சில்வர் மற்றும் சப்பயர் பிளாக் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு நல்ல டிசைன் மற்றும் பீச்சர்களை பேக் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17 5G With 8GB RAM Available At Rs 31999 on Amazon Great Indian Festival 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X