Home
News

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. 50எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 4 போன்களின் விலையை குறைத்த சாம்சங்..

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி நான்கு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம்14, சாம்சங் கேலக்ஸி எப்14, சாம்சங் கேலக்ஸி எம்04, சாம்சங் கேலக்ஸி எப்04 போன்ற ஸ்மார்ட்போன்களுககு தான் தற்போது விலையைக் குறைத்துள்ளது.

அதாவது பண்டிகை வருவதால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் சாதனங்களின் விலையைக் குறைத்த வண்ணம் உள்ளன. அதேபோல் தான் சாம்சங் நிறுவனமும் தனது நான்கு ஸ்மார்ட்போன்களுக்கு விலையைக் குறைத்துள்ளது. இப்போது இந்த 4 ஸ்மார்ட்போன்களின் புதிய விலையைப் பார்ப்போம்.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க..  4 போன்களின் விலையை குறைத்த சாம்சங்..

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14) போன் ஆனது இந்தியாவில் ரூ.13,490 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்14 போனை ரூ.12,490 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.14,990 விலையில் செய்யப்பட்ட நிலையில், தற்போது 13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்14 (Samsung Galaxy F14) போன் இந்தியாவில் ரூ.14,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எப்14 மாடலை ரூ.11,990 விலையில் வாங்க முடியும். மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.15,490 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் ரூ.13,490 விலையில் வாங்க முடியும்.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க..  4 போன்களின் விலையை குறைத்த சாம்சங்..

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் முன்பு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பு மூலம் ரூ.7,999 விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்04 (Samsung Galaxy F04)போன் முன்பு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் ரூ.7,999 விலையில் வாங்க முடியும்.

அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன்களை வாங்க முடியும். மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்14 அம்சங்கள் (Samsung Galaxy M14 specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போன். பின்பு 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 ( Exynos 1330 ) சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவு உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க..  4 போன்களின் விலையை குறைத்த சாம்சங்..

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போன் மாடல் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M14, Galaxy F14, Galaxy M04, Galaxy F04 Discounts in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X