Home
News

வெறும் 13,490 ரூபாய்க்கு Samsung Galaxy M14 5G.. ஆஃபர்னா இப்படி இருக்கனும்!

சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்துவருகிறது. அசத்தலான அம்சங்கள் உடன் கம்மி விலையில் விற்பனைக்கு வெளியிடுகிறது. இந்த விலையில் அமேசான் ஆஃபரும் சேர்ந்தால், சொல்லவா வேண்டும். அப்படி சாம்சங் கேலக்ஸி எம் 14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஸ்மார்ட்போன் யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தப்படியாக அதிகப்படிான மக்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருப்பது சாம்சங் மட்டுமே. ஐபோனுக்கு என ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல, சாம்சங் போனுக்கும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய போனுக்காக காத்திருந்து வாங்கி செல்வோரும் உண்டு.

வெறும் 13,490 ரூபாய்க்கு Samsung Galaxy M14 5G.. ஆஃபர்னா இதுதான்!

ஆப்பிள் நிறுவனத்தை போலல்லாமல், சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் தனது ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், சாம்சங்கில் அடுத்தடுத்து 5ஜி போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அப்படி, இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 14 5ஜி போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பட்ஜெட் போன் என்பதால், 4 ஜிபி ரேம் - 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜியின் விலை ரூ.14,990 ஆகவும், 6 ஜிபி ரேம் - 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.16,490 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு கம்மியான விலைக்கு சாம்சங்கில் 5ஜி போன் கிடைப்பதே வியப்பாக இருக்கும் நேரத்தில், அமேசானின் அதிரடி ஆஃபர் மூலம் மேலும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி அம்சங்கள்: இந்த சாம்சங் கேலக்ஸி போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே (2408x1080 பிக்சல்கள்) உடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 உடன் Exynos 1330 (5என்எம்) (Exynos 1330 (5nm)) ப்ராசஸர் இருக்கிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் - 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் - ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

குறிப்பாக 6,000mAh பேட்டரி 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி போர்ட்டை பொறுத்தவரையில் வழக்கமான டைப்-சி ஆக உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ உடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பில் இருக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது. நேவி ப்ளூ (Navy Blue), லைட் ப்ளூ ( Light Blue), சில்வர்
(Silver) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி அமேசான் ஆஃபர்: இந்த 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.14,990 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அமேசான் தளத்தில் ரூ.1,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஃஎப்சி வங்கியின் (HDFC Bank ) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஆஃபரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆஃபர் மூலம் சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனை வெறும் 13,490 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த விலை 4 ஜிபி ரேம் - 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டு போனுக்கானது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M14 5G available just at Rs 13490 on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X