என்னது? ரூ.10,000க்கு இறங்கிடுச்சா.. 6000mAh பேட்டரி உடன் வரும் Samsung போன் மீது அல்டிமேட் விலை குறைப்பு!
ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், பிரபலமான சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது அமேசான் (Amazon) வழங்கும் இந்த சிறப்பு சலுகை, முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். அதென்ன மாடல்? அதன் புதிய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா வலைதளம் வழியாக மிகவும் குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் சாம்சங் கேலக்ஸி எம்13 மீது 27% நேரடி தள்ளுபடி (Flat Discount) கிடைக்கிறது.

இந்த சலுகையின் கீழ் சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனின் விலை எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. முன்னதாக ரூ.14999 க்கு வாங்க கிடைத்த இந்த சாம்சங் ஸ்மார்ட்போனானது தற்போது வெறும் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ.4000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் டின் விலையாகும்.
நேரடி தள்ளுபடி மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எம்13 மீது எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer) மற்றும் சில பிரத்யேகமான வங்கி சலுகைகளும் (Bank Offers) அறிவிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்சேன்ஜ் சலுகையை பொறுத்தவரை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை அமேசானிடம் எக்ஸ்சேன்ஜ் செய்தால் உங்களுக்கு ரூ.10,400 வரையிலான எக்ஸ்சேஞ்ச் வேல்யூ (Exchange Value) கிடைக்கும்.
உங்களுக்கு கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலைமையை கொண்டே நிர்ணயம் செய்யப்படும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். மேலும் உங்கள் பகுதியில் எக்சேஞ்ச் ஆஃபரை அணுக முடியுமா என்பதை, உங்கள் பின் கோட் (PIN Code) வழியாக முன்னரே சரிபாத்துக்கொள்ளவும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, அமேசான் இந்தியா வலைத்தளம் பல வகையான வங்கி தள்ளுபடிகளை பட்டியலிட்டுள்ளது. எச்எஸ்பிசி வங்கியின் (HSBC Bank) கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ,2000 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினாலே ரூ.250 சலுகை கிடைக்கும். அதேபோல் யெஸ் பேங்க் (Yes Bank) கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.1500 தள்ளுப்படி கிடைக்கும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிறது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி + 2எம்பி சென்சார்கள் உள்ளன. இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டாகோர் ப்ராசஸர் உடனான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 4 (One UI Core 4) மூலம் இயங்குகிறது.
6000எம்ஏஎச் பேட்டரியை வழங்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி. மேலும் இது அக்வா கிரீன் (Aqua Green), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ஸ்டார்டஸ்ட் ப்ரவுன் (Stardust Brown) என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








