நீங்க என்ன OFFER தர்றது.. நானே விலை குறைக்கிறேன்.. 4 SAMSUNG போன்களின் மீது அதிரடி விலை குறைப்பு!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனை வருகிற அக்.8 முதல் அக்.15 வரை நடக்கவுள்ளது. மறுகையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) விற்பனையும் அக்.8 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது.
இவ்விரு விற்பனைகளிலுமே சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீது நல்ல-நல்ல தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கிடையில் சாம்சங் நிறுவமானது "நீங்க என்ன ஆஃபர் தர்றது.. நானே விலை குறைக்கிறேன்" என்று கூறும்படியாக 4 கேலக்ஸி போன்களின் மீது திடீர் விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது.

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் எம் சீரீஸ் (M-Series) மற்றும் எஃப் சீரீஸின் (F Series) கீழ் தலா 2 மாடல்கள் என மொத்தம் 4 ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்13 (Galaxy M13), கேலக்ஸி எஃப்13 (Galaxy F13), கேலக்ஸி எஃப்04 மற்றும் கேலக்ஸி எம்04 (Galaxy M04) மாடல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட அனைத்து மாடல்களுமே பட்ஜெட் விலை மாடல்களாகும். தற்போது இன்னும் மலிவாகி உள்ளன. கேலக்ஸி எம்13, கேலக்ஸி எஃப்13, கேலக்ஸி எஃப்04 மற்றும் கேலக்ஸி எம்04 மாடல்களின் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
கேலக்ஸி எம்04 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.8,499 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும். கேலக்ஸி எம்04 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.9,499 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எம்13 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.11,499 க்கு பதிலாக ரூ.9,199 க்கு வாங்க கிடைக்கும். கேலக்ஸி எம்13 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.12,499 க்கு பதிலாக ரூ.11,199 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஃப்04 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும். கேலக்ஸி எம்13 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,199 க்கு வாங்க கிடைக்கும். கேலக்ஸி எம்13 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இனிமேல் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,199 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்13 முக்கிய அம்சங்கள்: 6.60-இன்ச் டிஸ்பிளே, சாம்சங் எக்ஸினோஸ் 850 சிப்செட், 8எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்04 முக்கிய அம்சங்கள்: 6.50-இன்ச் டிஸ்பிளே, 5எம்பி செல்பீ கேமரா, 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 முக்கிய அம்சங்கள்: 6.60-இன்ச் டிஸ்பிளே, சாம்சங் எக்ஸினோஸ் 850, 8எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.50-இன்ச் டிஸ்பிளே, 5எம்பி செல்பீ கேமரா, 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








