Home
News

இது என்னப்பா சோதனையா? இந்தியாவில் திடீர் விலை அதிகரிப்பை கொண்டு வந்த சாம்சங்.. எந்த மாடலுக்கென்று தெரியுமா?

சாம்சங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 ஆகிய இரண்டு பிரபலமான ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை தற்போது அதிகரித்துள்ளது. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் விலை இப்போது அதிகரித்துள்ளது. இந்த மாடல்களின் மீது எவ்வளவு அதிகரித்துள்ளது, இனி இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 விலை அதிகரிப்பா?

சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 விலை அதிகரிப்பா?

சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 இன் புதிய விலை அதிகரிப்பை நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த இரண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மீதும் ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 இந்திய சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றதற்கு முக்கிய காரணமே இதன் குறைவான விலை தான்.

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் அதிகரிக்கப்பட்ட புதிய விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் அதிகரிக்கப்பட்ட புதிய விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி எம் 12 இன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ. 11,499 விலையில் கிடைக்கிறது. இதன் அசல் சில்லறை விலை ரூ. 10,999 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எம் 12 இந்த ஆண்டின் தொடக்கத்தில் 6.5' இன்ச் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 850 ப்ராசசர், 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு, 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர், 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற சில சக்திவாய்ந்த விவரக்குறிப்புகளுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி F12 ஸ்மார்ட்போனின் அதிகரிக்கப்பட்ட புதிய விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி F12 ஸ்மார்ட்போனின் அதிகரிக்கப்பட்ட புதிய விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி F12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் இப்போது ரூ. 10,999 என்ற சில்லரை விலை இருந்து, ரூ. 11,499 என்ற அதிகரிக்கப்பட புதிய விலையில் இனி கிடைக்கிறது. அதேபோல், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 12,499 என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சாம்சங் கேலக்ஸி எம் 12 மற்றும் கேலக்ஸி எஃப் 12 இன் புதிய விலைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிரதிபலிக்கின்றது.

ரியல்மி மற்றும் ரெட்மி தொலைப்பேசிகள் விலையும் உயர்ந்ததா?

ரியல்மி மற்றும் ரெட்மி தொலைப்பேசிகள் விலையும் உயர்ந்ததா?

சாம்சங் உடன் இணைந்து, ரியல்மி, ரெட்மி உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதன் சில பிரபலமான ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளன. மிக சமீபத்தில், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ரியல்மீ இந்தியாவில் ரியல்மி 8, ரியல்மி 8 5 ஜி, ரியல்மி சி 11 (2021), ரியல்மி சி 21 மற்றும் ரியல்மி சி 25 உள்ளிட்ட 5 போன்களின் விலையை ரூ. 1500 உயர்த்தியுள்ளது. ரெட்மி நோட் 10, ரெட்மி 9, ரெட்மி 9i, ரெட்மி 9 பவர், ரெட்மி நோட் 10T மற்றும் ரெட்மி நோட் 10s உள்ளிட்ட சில பிரபலமான போன்களின் விலையை ரெட்மி சமீபத்தில் அதிகரித்துள்ளது.

Samsung பற்றி கூடுதல் செய்திகள் தெரிய வேண்டுமா?

Samsung பற்றி கூடுதல் செய்திகள் தெரிய வேண்டுமா?

Samsung பற்றி கூடுதல் செய்திகள் தெரிய வேண்டுமா? புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் தெரிய எண்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். கூடுதல் விபரங்களுக்கு எங்களின் செய்தி பக்கத்தின் சமூக வலைதள பக்கத்தின் பதிவுகளை பின் தொடருங்கள். தொழில்நுட்பம், அறிவியல், மொபைல், ஸ்மார்ட் டிவி பற்றிய செய்திகளுக்கு கிஸ்பாட் கிளிக் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M12 And Samsung Galaxy F12 Gets Price Hike In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X