சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனம் அன்மையில் கேலக்ஸி எம்10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இன்று விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட இந்த சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே அம்சம்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான சிப்செட் வசதி:
இந்த ஸ்மார்ட்போனின் இயக்கத்திற்கு தகுந்தபடி 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி:
கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதிகள் உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா சிறப்பம்சம்:
இந்த சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ
கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளதால் மிகத் தெளிவாக வீடியோ மற்றும் புகைப்படங்களை
எடுக்க முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
கேலக்ஸி எம்10 சாதனத்தில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் ஜிபிஎஸ்,
வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட்டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








