Home
News

பொசுக்குன்னு.. ரூ.8000 க்கு இறங்கிய 8GB ரேம் போன்.. 1 வருட வாரண்டி, 5000mAh பேட்டரி வேற.. என்ன மாடல்?

1 வருட டிவைஸ் உத்தரவாதத்தையும், வாங்கிய தேதியிலிருந்து பேட்டரிகள் உட்பட இன்-பாக்ஸ் ஆக்சஸெரீஸ்களுக்கு 6 மாத உத்தரவாதத்தையும் வழங்கும் பட்ஜெட்-விலை சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்றானது.. திடீரென ரூ.8000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. அதென்ன மாடல்? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தின் கீழ் ரூ.3500 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை (Original Price) ரூ.11,999 ஆகும்.

பொசுக்குன்னு.. ரூ.8000 க்கு இறங்கிய 8GB ரேம் போன்!

தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வெறும் ரூ.8499 க்கு வாங்க கிடைக்கிறது. இதுமட்டுமல்ல அமேசான் வலைத்தளமானது இந்த ஸ்மார்ட்போனின் மீது ஒரு நல்ல எக்ஸ்சேஞ்ச் டீலையும் (Exchange Deal) வழங்குகிறது. இதன் கீழ் நீங்கள் ரூ.8050 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இந்த தள்ளுபடி நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் நிலை மற்றும் மறுவிற்பனை மதிப்பை (Resale value) பொறுத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் பின் கோட்-ஐ (PIN Code) அமேசான் வலைதளத்தில் உள்ளிட்டு முன்பே சரிபார்த்துகொள்ளவும். இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கும் வங்கி சலுகைகளை (Bank Offers) அமேசான் வழங்குகிறது. எச்எஸ்பிசி (HSBC) கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 5% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில், நேர்மையான அம்சங்கள் மற்றும் நல்ல டிசைனை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை (Best Phone Under Rs 10000) தேடும் எவருமே சாம்சங் கேலக்ஸி எம்04 மீது கிடைக்கும் இந்த தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பற்றியும், நிறைகள் மற்றும் குறைகளை (Pros and Cons) பற்றியும் அறிய தொடர்ந்து படிக்கவும்

சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டாகோர் 2.3ஜிகாஹெர்ட்ஸ் (MediaTek Helio P35 Octa Core 2.3GHz) சிப்செட் உடன் வருகிறது. இது 13எம்பி மற்றும் 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பெரிய 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே (LCD Display) மற்றும் 5000எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரியுடன் (5000mAh Lithium-ion battery) வரும் சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் ஆனது 1 வருட டிவைஸ் உத்தரவாதத்தை (1 year manufacturer warranty) வழங்குகிறது. கூடவே வாங்கிய தேதியிலிருந்து பேட்டரிகள் உட்பட ஸ்மார்ட்போனின் இன்-பாக்ஸில் இருக்கும் பாகங்களுக்கு (In-box accessories) 6 மாத உற்பத்தியாளர் உத்தரவாதத்தையும் () வழங்குகிறது.

ஷேடோ ப்ளூ (Shadow Blue) மற்றும் சீ கிளாஸ் ப்ளூ (Sea Glass Blue) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் நிறைகள் மற்றும் குறைகளை பற்றியும் மேலோட்டமாக பார்த்துவிடலாம்; அப்போது தான் இந்த அமேசான் சலுகையை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்கிற முடிவுக்கு வர முடியும்.

நிறைகளை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடனான ஒன்யுஐ கோர் 4.1 கஸ்டமைசேஷன் உடன் வருகிறது. ரேம் பிளஸ் அம்சத்தின் கீழ் 8ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் இதில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. கூடவே பெரிய பேட்டரி கெப்பாசிட்டி உடன் வருகிறது. சுவாரசியமாக இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கவும்.

குறைகளை பொறுத்தவரை, இது மல்டிடாஸ்கிங் (Multi tasking) மற்றும் கேமிங்கிற்கான (Gaming) ஸ்மார்ட்போன் அல்ல. அதிகப்படியான பயன்பாட்டின் போது ஹீட்டிங் சிக்கல்கள் (Heating Problems) ஏற்படுகிறது. இது சராசரியான கேமரா செட்டப்பையே கொண்டுள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner) இல்லை. கடைசியாக இது 720பி ரெசல்யூஷன் டிஸ்பிளேவைத்தான் (720p Resolution Display) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M04 Now Available For Just Rs 8499 in Amazon Check Pros Cons Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X